ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் என்னாச்சு..? பொங்கல் பரிசு தொகை ரூ 2500 யை மாவட்ட நிர்வாகத்திடம் திருப்பி கொடுத்த விவசாயிகள்..!

Tamilnadu government recently announced the pongal gift of 2500 rupees along with other basic supplies.


திருப்பூர்: 40 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்ட ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழக அரசு கொடுத்த பொங்கல் பரிசு தொகை 2500 ரூபாய் பணத்தை, விவசாயிகள் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் திருப்பி அளித்தனர்.



திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமான ஆனைமலையாறு-நல்லாறு திட்டம். ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. எனவே, அதை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பொங்கல் பரிசுத் தொகையாக அரசு வழங்கிய 2500 ரூபாய் நிதியை மாவட்ட நிர்வாகத்திடம் திருப்பி அளித்துள்ளனர்.



அப்போது, விவசாயிகளை காவல்துறையினர் உள்ளே நுழைய அனுமதிக்க மறுத்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தினுள் தரையில் அமர்ந்து, தங்களை அனுமதிக்க கோரிக்கை விடுத்தனர். பின்னர், காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, மீண்டும் விவசாயிகள் 2500 ரூபாய் நிதியை மாவட்ட நிர்வாகத்திடமே திருப்பி அளித்து விரைந்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும், என வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர்.

தமிழக அரசு நிர்வாகம் இனியும் காலம் தாழ்த்தும் பட்சத்தில் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...