பொள்ளாச்சி: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காய்கறி சந்தை வளாகத்தில் ஒரு கோடியே 20 லட்சம் செலவில் வாரச் சந்தை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்ட இந்த வாரச் சந்தையை கட்டிடத்தை கடந்த அக்டோபர் மாதம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார்.

இந்தநிலையில், திறப்பு விழா நடந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் பேரூராட்சி நிர்வாகம் மக்கள் பயன்பாட்டிற்கு கட்டிடத்தை கொண்டுவரவில்லை.

புதிதாக கட்டப்பட்ட வாரச்சந்தை கட்டடத்திற்குள் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்தாலும் அதற்கான மின்னிணைப்பு ஏதும் இல்லாததால், வாரச்சந்தை நடைபெற்றால் இருளில் நடத்தவேண்டிய சூழல் நிலவும் என்பதால் வியாபாரிகளும் காய்கறி சந்தை வளாகத்திலேயே சந்தையை நடத்தி வருகின்றனர்.
எனவே, கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து கட்டப்பட்ட வாரசந்தை கட்டடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.