கோவை: அளவுக்கு அதிகமாக மது அருந்திய வாலிபர் பிறந்தநாளில் இறந்தார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜூன் (வயது 20). இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை ஜனசங்கம் பாளையத்தில் தங்கி கறவை எந்திரம் ஆபரேட்டராக வேலைபார்த்து வந்தார். கடந்த 1-ம் தேதி மல்லிகார்ஜுன் பிறந்த நாளாகும். புத்தாண்டு மற்றும் பிறந்த நாளையொட்டி மல்லிகார்ஜுன் தனது நண்பர்களுடன் அன்று இரவு மது குடித்தார்.
அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததாகத் தெரிகிறது. பின்னர் மல்லிகார்ஜுன் வீட்டுக்கு வந்தார். அடுத்த நாள் காலை அவரது செல்போனுக்கு நண்பர்கள் அழைத்தனர். போனை அவர் எடுக்கவில்லை. சந்தேகமடைந்த நண்பர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவர் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் மல்லிகார்ஜுன் வேலை தேடி வந்த 10 நாட்களுக்கு முன்புதான் ஆனைமலை வந்தது தெரியவந்தது.