கோவை: வனத்துறையினர் மற்றும் வன உயிரின காப்பகத்தில் சாலையோரங்களில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது காயங்களுடன் உடும்பு ஒன்று சிக்கியது.

கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு மற்றும் துடியலூர் பிரிவுக்கு உட்பட்ட மாங்கரை வனதணிக்கை நிலையம் முதல் ஆனைகட்டி ஆசிரமம் வரையுள்ள சாலையின் இருபுறமும் கண்ணாடிபாட்டில்கள் மற்றும் பாலித்தீன் குப்பைகளை அகற்றும் பணியில் நேற்று காலை தமிழ்நாடு வனத்துறையினருடன் இணைந்து தமிழ்நாடு வன உயிரின பாதுகாப்பு அமைப்பினர் ஈடுபட்டனர். இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பினர் இணைந்துதூய்மைப்பணிகளை மேற்கொண்டனர்.
தூய்மைப்பணியின்போது சுமார் ஒன்றரை டன் பாட்டில்கள் மற்றும் பாலித்தீன் குப்பைகளை சேகரித்து மாங்கரை வனத்தணிக்கை நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் அந்த குப்பைகளை வீரபாண்டி பஞ்சாயத்திடம்ஒப்படைக்கப்படும். வனத்துறையினரின் இந்த தூய்மைப் பணியின்போது சலீம் அலி பகுதியில் சாலையோரத்தில் அடிபட்டு காயங்களுடன் உடும்பு ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அதைப் பிடித்து வனவரிடம் ஒப்படைத்தனர்.
இந்தப் பணியின்போது தமிழ்நாடு வன உயிரின பாதுகாப்பு அமைப்பின் தலைவர்அருண் குமார், செயலாளர் சதீஷ் குமார், பொருளாளர் சரவணக்குமார்
மற்றும் உறுப்பினர்கள், இயற்கை விலங்குகள் பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவி ஷோபனா மற்றும் அவர்களது அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.