ஆசாரியிடம் தாலி வாங்கி கட்டினால் நன்றாக வாழ்கிறார்கள், மார்வாடியிடம் தாலி வாங்கியவர்கள் விவாகரத்து செய்கிறார்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சை பேச்சு!

கோவை: ஆசாரிகள் செய்யும் தாலியை வாங்கிக் கட்டியவர்கள் நன்றாக வாழ்கிறார்கள், மார்வாடியிடம் தாலி வாங்கினால் விவாகரத்தில் போய் முடிகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: ஆசாரிகள் செய்யும் தாலியை வாங்கிக் கட்டியவர்கள் நன்றாக வாழ்கிறார்கள், மார்வாடியிடம் தாலி வாங்கினால் விவாகரத்தில் போய் முடிகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காந்திபார்க் பகுதியில் நடைபெற்ற தமிழ்நாடுவிஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கத்தின் 44-வது செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். முன்னதாக கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஆன்மீக ஆட்சியை நடத்தக்கூடிய வல்லமை அ.தி.மு.க.வுக்கு மட்டுமே உள்ளது. ஆசாரியிடம் வாங்கும் தாலி கட்டியவர்கள்தான் நன்றாக வாழ்கிறார்கள். மார்வாடியிடம் தாலி வாங்கியவர்கள் விவாகரத்தில்தான் நிற்கிறார்கள்.

விஸ்வகர்மா சமுதாய மக்கள் யார் பக்கம் நிற்கிறார்களோ அவர்கள் வெற்றி பெற்று ஆளக்கூடிய தகுதியைப் பெறுவார்கள். தியாகராஜ பாகவதருக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என மனு கொடுத்தவுடன் 110 விதியின்கீழ் அறிவிப்பு வெளியிட்டார் முதலமைச்சர். பெண்ணை அடிப்பது தி.மு.க. வுக்கு தொழிலாக போய்விட்டது. சாமி கும்பிடாதவர் எதற்காக தொண்டாமுத்தூரில் பெருமாள் கோவிலை அடைத்து கூட்டம் போட வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சி அமைய விஸ்வகர்மா சமூகம் அணில் போல இருக்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சிக்கு ஒரு படிக்கல்லாக நாம் இருந்தோம் என வரலாறு இருக்க வேண்டும். சமுதாய வளர்ச்சிக்கு என்ன கேட்டாலும் அரசு சார்பில் செய்து தருவோம். எடப்பாடியின் ஆட்சி மற்றும் திட்டங்களை நீங்களும் மக்களிடம் கொண்டு செல்லுங்கள். தி.மு.க.வினர் ஆமை ஆட்சி செய்ய விரும்புகிறார்கள்.ஆமை நுழைந்த வீடும் ஸ்டாலின் நுழைந்த ஊரும் உருப்படாது. நான்கு மாதத்திற்குப் பிறகு சின்னாபின்னமாகி சட்டையை கிழித்துவிட்டு அலையப் போகிறாய் நீ. எங்களையும் உன்னைப்போல் முதலமைச்சர் அவிழ்த்து விட்டால் தி.மு.க.வையே இல்லாமல் ஆக்கி விடுவோம்.

கோவை மாவட்டம் மட்டுமன்றி எல்லா மாவட்டத்திற்கும் உள்ளாட்சித் துறையில் பல திட்டங்களை செய்துள்ளார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி. தற்போது இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது எனக் கேட்கும் ஸ்டாலின் அவர்களது ஆட்சியின்போதுபணத்தை என்ன செய்தார்கள். தி.மு.க.வினர் எங்கு சென்றாலும் தகராறு, அடிதடியில் ஈடுபடுகின்றனர். தற்போது தமிழகத்தில் அனைவரும் தெளிவாகி வருகின்றனர்.

வெற்றியின் சின்னம் இரட்டை இலை. எந்த நாட்டில் யார் வெற்றி பெற்றாலும் இரட்டை விரலைத் தான் காட்டுகிறார்கள். எனவே விஸ்வகர்மா மக்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...