கோவையில் 'தமிழக நாயுடு பேரவை' ஆலோசனை கூட்டம்: எங்கள் சமூகத்திற்கு உரிய மரியாதை அளிக்கும் கட்சிக்கு ஆதரவு..!

கோவை: வரும் சட்டமன்ற தேர்தலில் உரிய மரியாதை அளித்து, சீட் வழங்கும் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, கோவையில் நடைபெற்ற “தமிழக நாயுடு பேரவை” ஆலோசனை கூட்டத்தில் மாநில தலைவர் டாக்டர். D. குணசேகரன் நாயுடு அறிவித்துள்ளார்.


கோவை: வரும் சட்டமன்ற தேர்தலில் உரிய மரியாதை அளித்து, சீட் வழங்கும் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, கோவையில் நடைபெற்ற “தமிழக நாயுடு பேரவை” ஆலோசனை கூட்டத்தில் மாநில தலைவர் டாக்டர். D. குணசேகரன் நாயுடு அறிவித்துள்ளார்.

கோவையில் நாயுடு பேரவையின் சார்பில் நாயுடு மற்றும் நாயக்கர் பிரிவுகள் உள்ளிட்ட பிரிவினரின் மாவட்ட ஆலோசனை கூட்டம் இன்று ஜனவரி மாதம் 3 - ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.

"தமிழக நாயுடு பேரவையானது கடந்த 2001 - ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதில் நாயுடு, நாயக்கர் வகுப்பை சார்ந்த அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு மிகப்பெரிய அமைப்பாக உருவாக்கப்பட்டு வருகின்றது. தற்போது, தமிழகம் முழுவதும் பல லட்சம் உறுப்பினர்கள் உள்ளார்கள். கோவையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு துவக்கப்பட்ட பேரவையில் மட்டும் சுமார் 15 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்", என கோவை மாவட்ட தலைவர் V. ஜெய்சங்கர் நாயுடு தெரிவித்தார்.

மேலும், தெரிவிக்கையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேரவையின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது, அந்தந்த மாவட்டங்களில் நிர்வாக பொறுப்பு அமைந்து நிர்வாகம் செயல்பட்டு வருகின்றது, எனவும் வரும் சட்டசபை தேர்தல் குறித்தும் பேரவையின் அரசியலமைப்பு ஆரம்பிப்பது குறித்தும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும், என கூறினார்.

"வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களது சமூகத்திற்கு உரிய மரியாதை அளித்து, சட்டமன்ற தேர்தலில் உரிய சீட் வழங்கும் கட்சிகளுக்கு எங்களது ஆதரவை வழங்குவோம். நாயக்கர் வகுப்பை சார்ந்த அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு தமிழகத்தில் மிகப்பெரிய அமைப்பாக உள்ளனர். தற்போது, தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் உறுப்பினர்கள் உள்ளனர், ஜாதி வாரியாக செய்யும் ஒதுக்கீடை நிறுத்தி தகுதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்"என மாநில தலைவர் டாக்டர். D. குணசேகரன் நாயுடு தெரிவித்தார்.

மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களது சமூகத்திற்கு உரிய மரியாதை அளித்து, சட்டமன்ற தேர்தலில் உரிய சீட் வழங்கும் கட்சிகளுக்கு எங்களது ஆதரவை வழங்க உள்ளோம், என்றார்.

தமிழக நாயுடு பேரவையின் மாற்றுத்திறனாளிகள் பிரிவு, மாநில செயலாளர், ஊன்றுக்கோல் J. கருணாகரன் நாயுடு, மாநில ஒருங்கிணைப்பாளர் S. நவநீதகிருஷ்ணன் நாயுடு, மாநில பொதுச் செயலாளர். S. பாலாஜி நாயுடு, மாநில பொருளாளர். T. சுரேஷ் நாயுடு மற்றும் மாநில தலைமை நிலைய செயலாளர் J. அரவிந்தபாபு நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...