கோவை: ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்துக்கு போதிய மானியம் வழங்க வேண்டுமென்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.

அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்துக்குத் தேவையான மானியம் வழங்கப்படாததால் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மானியம் வழங்குவதில் தடை ஏற்பட்டால், இந்த பல்கலைக்கழகம் சுயநிதி நிறுவனமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பெண் குழந்தைகளின் உயர்கல்வி வாய்ப்பு பறிபோகும் ஆபத்து உள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு உடனடியாக அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்துக்குத் தேவையான மானியத்தை ஒதுக்கீடு செய்து உதவ வேண்டுமென கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கரியாலுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
என்னுடைய தொகுதியில் செயல்பட்டு வரும், அவினாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சந்திக்கும் ஒரு முக்கியமான பிரச்சினையை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருவதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அவினாசிலிங்கம் கல்லூரி 1957-ம் ஆண்டு பெண்களுக்காகத் தொடங்கப்பட்டது. ஆரம்பத்திலிருந்து அரசு மானியத்துடன் இயங்கிவந்த இக்கல்லூரி 1988-ம் ஆண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக உயர்த்தப்பட்டு மத்திய அரசின் முழு மானியத்துடன் இயங்கி வருகிறது.
2015-ம் ஆண்டு மானியம் நிறுத்தப்பட்டதால் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து பல்கலைக்கழகத்துக்கு புதிய வேந்தர் நியமனம் செய்யப்பட்டு, பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது. ஆனால் 2020-ல் மீண்டும் மானியம் வழங்குவதில் பிரச்சினை எழுந்துள்ளது. ஜூலை மாதத்தில் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பாதி அளவே வழங்கப்பட்டது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் 75 சதவிகிதம் மட்டுமே வழங்கப்பட்டது. தொடர்ந்து மானியம் வழங்குவதில் தடை ஏற்பட்டால் இந்த பல்கலைக்கழகம் சுயநிதி நிறுவனமாக மாறிவிடும் அபாயம் உள்ளது.
அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால், ஆயிரக்கணக்கான ஏழை-எளிய பெண் குழந்தைகளின் உயர்கல்வி வாய்ப்பு பறிபோகும். எனவே தாங்கள் உடனடியாக தலையிட்டு அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்துக்கு தொடர்ந்து மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொள்கிறேன்.மேலும், இந்தப் பல்கலைக்கழகம், மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் வந்தால்தான் தொடர்ந்து மானியம் கிடைக்கும் என்றால் அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். இவற்றை கருத்தில்கொண்டு இந்த பல்கலைக்கழகத்துக்கு தொடர்ந்து மானியம் வழங்குவதை உத்தரவாதப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.