கோவை கிராமசபைக் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்திய பெண் வெளியேற்றப்பட்டார்..!

கோவை: தி.மு.க. நடத்திய கிராமசபைக் கூட்டத்தில் புகுந்த பெண் கேள்வி கேட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.


கோவை: தி.மு.க. நடத்திய கிராமசபைக் கூட்டத்தில் புகுந்த பெண் கேள்வி கேட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட தேவராயபுரம் பகுதியில் தி.மு.க. சார்பில் கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது குறுக்கிட்ட பெண் ஒருவர் கிராம சபை என்றால் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

இதைத்தொடர்ந்து `நீ எந்த ஊரும்மா?' என ஸ்டாலின் கேள்வி கேட்டார். அப்போது அந்தப்பெண் மைல்கல் பகுதியிலிருந்து வருவதாக தெரிவித்தார். மேலும் அந்தப்பெண், `தான் ஒரு இந்திய பிரஜை எனக்கு கேள்வி கேட்க உரிமையுள்ளது' என்று கூறினார். இதைத்தொடர்ந்து பேசிய ஸ்டாலின் அப்பெண் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சொல்லி வந்திருக்கிறார் என்று கூறினார் உடனடியாக தி.மு.க.வினர் கூச்சலிட்டனர். 

இதையடுத்து அந்தப்பெண் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...