Hindu Makkal Puratchi Padai State President warns to protest if TN government does not stop collecting special darshan fee in temple
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு ஒத்திகை முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசன்ட் திவ்யா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

உதகையில் உள்ள அரசுமருத்துவமனையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு ஒத்திகை முகாமை ஆட்சித்தலைவர் இன்னசன்ட் திவ்யா கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இதில் மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தவிர குன்னூர் தலைமை அரசு மருத்துவமனை, நெலாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் என மொத்தம் 3 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு ஒத்திகை முகாம் நடைபெற்று வருகிறது.

ஒரு மையத்தில் 25 சுகாதாரத்துறை ஊழியர்கள் என நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 75 பேர் கலந்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு மையத்திலும் வரவேற்பு அறை, காத்திருப்பு அறை, தடுப்பூசி போடும் அறை மற்றும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை கண்காணிக்கும் அறை என நான்கு பிரிவுகளாக ஏற்பாடு செய்யபட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி வழங்க நீலகிரி சுகாதார மாவட்டத்தில் 823 தடுப்பூசி வழங்கும் பணியாளர்கள் மற்றும்சுமார் 1,232 பணியாளர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பூசி போடும்போது ஏற்படும் இடர்பாடுகளை களையவே இதுபோன்ற ஒத்திகை நடத்தப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நீலகிரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 7,956 பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வரை 7,831 பேர் குணமடைந்துள்ளனர். இந்த ஒத்திகை முடிந்தவுடன் மத்திய அரசு மற்றும்சுகாதாரத்துறை செயலருக்கு சுகாதாரத்துறை மூலம் சமர்ப்பிக்கப்படும் என்றுமாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.