தமிழகத்திலேயே கோவையில் தான் ஊழல், அராஜகம் அதிகம் உள்ளது..! தொண்டாமுத்தூர் கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

கோவை: தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி, தொண்டாமுத்தூர் ஒன்றியம், தேவராயபுரம் ஊராட்சியில் மக்கள் கிராம சபை கூட்டம் இன்றுன்நடைபெற்றது.


கோவை: தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி, தொண்டாமுத்தூர் ஒன்றியம், தேவராயபுரம் ஊராட்சியில் மக்கள் கிராம சபை கூட்டம் இன்றுன்நடைபெற்றது. 



ஆயிரக்கணக்கான பொது மக்கள் மக்கள் கட்சி தலைவர்கள் மற்றும் கட்சியினர் பங்கேற்ற கூட்டத்தில் மக்களின் கேள்விகளுக்கும், குறைகளுக்கும், திமுக தலைவர் பேசுகையில், "இங்கே கூடிய கூட்டத்தை பார்க்கும் போது மக்களிடையே மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது என்பதை பார்க்க முடிகிறது. கடந்த டிசம்பர் 23ம் தேதி முதல் மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தி வருகிறோம். 12600க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நடத்த உள்ளோம். இந்த கிராம சபைக்கூட்டத்தில் மக்கள் காட்டும் அன்பு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது", என்றார். 

மேலும் அவர் பேசுகையில்: 



இந்த கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டாம் என்று தற்போது உள்ள அரசு கூறுகிறது. இன்னும் நான்கு மாதங்கள் தான் இந்த அரசுக்கு ஆயுள். இந்த நான்கு மாதங்களில் எவ்வாறு ஊழல் செய்யலாம், அராஜகம் செய்யலாம், என தற்போது உள்ள அரசு யோசித்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட கோவையில் தான் ஊழல், அராஜகம் அதிகமாக நடைபெற்று வருகிறது. நாங்கள் வந்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஊழலை எடுத்துக்கூறினால் தான் மக்களுக்கு தெரியுமா. மக்களுக்கு நாங்கள் சொல்லாமலே தெரியும். 

குடிநீர் பிரச்சனை, சாலை பிரச்சனை, நூறு நாள் வேலைவாய்ப்பு பிரச்சனை போன்ற அடிப்படை பிரச்சனைகளை சீர் செய்ய தான் கிராம சபைக்கூட்டம். அதனை உள்ளாட்சித்துறை தான் நடத்தனும். ஆனால், இந்த அரசு அதை நடத்தவில்லை ஆகவே நாங்கள் நடத்துகிறோம். 

நாடாளுமன்ற தேர்தலின் போது கிராம சபைக் கூட்டங்களை நடத்தினோம். அதில் மிகப்பெரிய வெற்றி அடைந்தோம். உள்ளாட்சித் தேர்தலுக்கும் அது பயன்பட்டது. 75 சதவீதம் திமுக வெற்றியடைந்தது.

இந்த மக்கள் கிராம சபைக்கூட்டத்திற்கு போட்டியா அதிமுக சார்பாக ஒர் கூட்டம் நடத்த போகிறார்கள். அதில் மக்கள் கேட்கும் கேள்விற்கு பதில் சொல்ல தெம்பு உள்ளதா?.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஊழல் மூன்று வருடமாக தெரு விளக்கு, எல்.டி.இ விளக்குகளாக மாற்றி ஊழல் செய்துள்ளார். விளக்கின் விலை ரூ.450 மட்டுமே ஆனால் ரூ.3737 வரை விலை கொடுத்து வாங்கியதாக கணக்கு காட்டுக்கிறார்கள்.  ரூ1550 மதிப்புள்ள எல்.இ.டி. பல்புகள்  ரூ. 14 ஆயிரத்து 919 என்கிற வகையில் ஊழல் நடக்கிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காண்டிராக்ட்களில் ஊழல். ரூ.6 ஆயிரம் கோடி வரை ஊழல். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட்டது. அதற்கு முதல்வர் உச்சநீதிமன்றத்தில் வழக்கை விசாரிக்கக்கூடாது என தடை வாங்கியுள்ளார். தமிழகத்தில் நடக்கும் ஊழல்கள் குறித்து கவர்னர் இடம் மனு அளித்துள்ளோம்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் சவாலுக்கு நான் தயார். ஊழல் புகார்கள் குறித்து ஆதாரங்களுடன் நிரூபிக்க தயார். அப்படி நிரூபித்துவிட்டால் நீங்கள் அரசியலை விட்டே விலக தயாரா?.

திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுகவின் ஊழல் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கி கொடுக்க போகிறோம்.எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவித்ததை ஒ பன்னீர் செல்வம் கூட ஏற்கவில்லை. கூட்டணி கட்சிகளும் ஏற்கவில்லை. பாஜக தான் முதல்வர் வேட்பாளரை அறிவிப்போம் என்கிறார்கள். முதல்வர் வேட்பாளரின் அறிவிப்பிலேயே இத்தனை குழப்பங்கள். ஆனால், திமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பில் எந்த குழப்பமும் இல்லை. 

ஜெயலலிதா இறப்பில் மர்மம் உள்ளது விசாரிக்க வேண்டும் என முதன் முதலில் குரல் கொடுத்தது திமுக தான். ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை நடக்கிறது. அது, மிகவும் மந்தமாக நடக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரிக்க உள்ளோம். அதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டனை கொடுக்க போகிறோம்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

இக்கூட்டத்தில் மக்கள் தங்களது கருத்துகளை கோரிக்கையாக முன் வைத்தனர். மக்கள் கூறிய கருத்துகள், சிறுவாணி குடிநீரை கார்ப்புரேட்டுகளுக்கு விற்பனை செய்வதை மீட்டு தர வேண்டும். விவசாய நிலத்தில் காட்டுபன்றிகள் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. காட்டுப்பன்றிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவராயபுரம் ஊராட்சி பகுதி நிலத்தடி நீரை நம்பி தான் உள்ளது. அதனை காக்க மழை நீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

நூறு வேலை வாய்ப்பில் சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் வாங்கிய கடனுகளுக்கான வட்டிகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கை முன் வைக்கப்பட்டன. 



கூட்டத்தில் சலசலப்பு ஏற்படுத்த முயன்ற பெண் : 

திமுக வின் மக்கள் கிராம சபை கூட்டத்தில் 10 பேருக்கு பேச அனுமதிக்கப்பட்டிருந்தது. பட்டியலில் இல்லாத பெண் ஒருவர் எதற்காக கிராம சபை கூட்டம் நடத்துகிறீகள் என திடீரென கேள்வி கேட்ட நிலையில் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது.

திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி கேட்ட பெண்ணை அமருமாறு தெரிவித்தார். தொடர்ந்து கேள்வி கேட்ட பெண் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.



கூட்டத்தின் நிறைவாக ஸ்டாலின் பேசியதாவது: 

கிராம சபை கூட்டத்தை நடத்த விடாமல் செய்ய அமைச்சர் வேலுமணி ஒரு பெண் மூலமாக கலவரத்தை தூண்டி விடுகிறார். மக்கள் கூட்டத்தில் திமுகவின் போர்வையில் அமர்ந்து பிரச்சனையை உருவாக்குகிறார் அமைச்சர் வேலுமணி. இது போன்ற நடவடிக்கைகளை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் கார்த்திக் எம்எல்ஏ (மாநகர் கிழக்கு), பையா கவுண்டர் (மாநகர் மேற்கு), சி.ஆர்.ராமச்சந்திரன் (புறநகர் வடக்கு), தென்றல் செல்வராஜ் (புறநகர் தெற்கு), சேனாதிபதி (புறநகர் கிழக்கு) முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, உள்பட மக்கள் பலரும்  பங்கேற்றனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...