ஆலயங்களில் வழிபாட்டுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்தாவிடில் போராட்டம்: அரசுக்கு எச்சரிக்கை!

கோவை: இந்து ஆலயங்களில் சிறப்பு கட்டண வழிபாட்டுக்கு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்யாவிட்டால் கல்லாப்பெட்டி உடைக்கும் போராட்டம் நடத்தப்படும் என அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: இந்து ஆலயங்களில் சிறப்பு கட்டண வழிபாட்டுக்கு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்யாவிட்டால் கல்லாப்பெட்டி உடைக்கும் போராட்டம் நடத்தப்படும் என அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



இந்து மக்கள் புரட்சி படை இயக்கத்தின் கொடி அறிமுக விழா இன்று கோவையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் பீமான் பாண்டி கொடியை அறிமுகப்படுத்தி வைத்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்துக்களுக்கு எதிராக செயல்படும் அனைத்து கட்சிகளும் வரும் தேர்தலில் தோற்கடிக்கப்படும். இந்துக் கோவில்களின் முன்பு பெரியார் சிலை அமைப்பது, பெரியார் சிலையில் வாசகங்கள் வைப்பது போன்ற செயல்களை உடனடியாக தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் கிறிஸ்தவ ஆலயங்கள், இஸ்லாமியர் பள்ளிவாசல்கள் முன்பும் இதேபோன்று சிலைகளில் வாசகங்கள் அமைப்போம். இந்து ஆலயங்களில் சிறப்புக் கட்டண வழிபாட்டுக்கு கட்டணங்கள் வசூலிப்பதை உடனடியாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் அனைத்துக் கோயில்களிலும் கல்லாப்பெட்டி உடைக்கும் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாநில ஊடகப்பிரிவு தலைவர் எம்.எஸ்.கே.செல்வம், மாவட்ட இளைஞரணி தலைவர் ராம் ராகுல்,கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன்,கோவை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சூர்யா மற்றும் சிறப்பு விருந்தினர்களான ராஷ்ட்ரிய ஜனதா சங்க மாநிலத் தலைவர் ராமநாதன், சிவசேனா காவி புலிப்படை நிறுவன மாநில துணைத் தலைவர் புலவஞ்சி போஸ், ஹிந்து தேசியக் கட்சியின் நிறுவனத் தலைவர் எஸ்.எஸ்.எஸ்.மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...