கோவை: ஒரு காலத்தில் கஞ்சா வியாபாரியாக இருந்தவர் திருந்தி வாழ்ந்த நிலையில் அவர்மீது வழக்குப் பதிவு செய்வதாக மிரட்டி ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய சோதனையில் ரூபாய் 67 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மனைவி மகேஸ்வரி. விஜயகுமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா விற்றுவந்ததாக தெரிகிறது. அதன் பிறகு அவர் திருந்தி கட்டட மேற்பார்வையாளராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் விஜயகுமாரிடம், `உன் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யாமல் இருக்க எங்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் லஞ்சமாக தர வேண்டும்' என்று கேட்டதாகக் கூறப்படுகிறது. அவர் தான் கஞ்சா விற்பனை செய்வதை நிறுத்தி விட்டதாக கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அவரை விடாமல் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது.
போலீசாரின் தொடர் மிரட்டலால் பயந்துபோன விஜயகுமார் நேற்று முன்தினம் கோவை கணபதியில் உள்ள போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரோஜினி மற்றும் ஏட்டு ஆகியோரிடம் ரூபாய் 30 ஆயிரம் லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மீதி 70 ஆயிரம் ரூபாய் இல்லாததால் அவர் தனது மனைவி மகேஸ்வரியின் நகையை அடகு வைக்கத் தருமாறு கேட்டுள்ளார். அவர் நகை தர மறுத்த நிலையில் இந்த விவகாரம் அவர்களது உறவினர்களுக்கு தெரியவந்தது. அவர்களது அறிவுறுத்தலின்பேரில் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய 70 ஆயிரம் ரூபாயை விஜயகுமாரிடம் கொடுக்க, அதை அவர் இன்ஸ்பெக்டர் சரோஜினி மற்றும் ஏட்டு ராமசாமியிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்கள் 2 பேரையும் கையும் களவுமாக மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அதன்பிறகு போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தியபோது கணக்கில் வராத ரூபாய் 67 ஆயிரத்து 100 சிக்கியது. அந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைதான 2 பேரும் விஜயகுமாரை ஏற்கனவே மூன்று முறை மிரட்டி பணம் வாங்கியது தெரியவந்தது.