திருப்பூர்: திருப்பூரில் அரசு மதுபானக்கடைக்கு எதிராக பொதுமக்கள் கொட்டும் மழையிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்லம் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் 1965 என்ற எண் கொண்ட அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் பெண்கள் அப்பகுதி வழியே பள்ளிக்கூடங்கள் மற்றும் கோவிலுக்கு சென்று வரும்போது மதுபிரியர்களால் ஆபத்து ஏற்படக்கூடிய சூழல் இருப்பதாக கடையை அப்புறப்படுத்த வலியுறுத்தி பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி அப்பகுதி பெண்கள் உட்பட பொதுமக்கள் மதுக்கடை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், காலை முதல் மழை பெய்து வந்த நிலையிலும் பொதுமக்கள் கடையை அப்புறப்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படாத நிலையில், பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
மேலும், டாஸ்மாக் நிர்வாகம் கடையை அப்புறப்படுத்த எழுத்துப்பூர்வமாக உறுதி கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.