Exclusive: உக்கடம்-ஆத்துபாலம் இரண்டாம் கட்ட மேம்பால பணிகள் நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் துவக்கும் என அதிகாரிகள் தகவல்

கோவை: கோவை உக்கடம் - ஆத்துபாலம் மேம்பால பணியில், உக்கடம் முதல் கரும்புக்கடை வரையிலான முதல் கட்ட பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. கரும்புக்கடை முதல் ஆத்துபாலம் வரையிலான இரண்டாம் கட்ட மேம்பால பணிகள் விரைவில் துவங்க உள்ளன. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் துவங்கும், என வருவாய் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

கோவை: கோவை உக்கடம் - ஆத்துபாலம் மேம்பால பணியில், உக்கடம் முதல் கரும்புக்கடை வரையிலான முதல் கட்ட பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. கரும்புக்கடை முதல் ஆத்துபாலம் வரையிலான இரண்டாம் கட்ட மேம்பால பணிகள் விரைவில் துவங்க உள்ளன. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் துவங்கும், என வருவாய் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். 

கோவை உக்கடம்-ஆத்துபாலம் சாலை, பொள்ளாச்சி செல்வதற்கும், குனியமுத்தூர் வழியாக கேரளா மாநிலம் செல்வதற்கும் முக்கிய சாலையாக உள்ளது. இச்சாலையில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக உக்கடம்-ஆத்துபாலம் இடையே 1.9 கிலோ மீட்டர் தூரம் வரை மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கியது. முதல் கட்டமாக உக்கடம் முதல் கரும்புக்கடை இடையே உள்ள மேம்பால பணிகளுக்கு ரூ.216 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. உக்கடம் - கரும்புக்கடை வரை 55 தூண்கள் அமைக்கப்பட்டு, அதில் ஓடுதளம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. மேலும், உக்கடம் பேருந்து நிலையம் அருகே மேம்பாலத்தில் ரவுண்டான அமைப்பதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

இதனிடையே, இரண்டாம் கட்ட மேம்பால பணிகள் கரும்புக்கடை முதல் ஆத்துப்பாலம் வரை விரைவில் துவக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இது குறித்து மாநில நெடுஞ்சாலை துறையினர் கூறுகையில், ‘‘ உக்கடம் -ஆத்துபாலம் இடையே இரண்டாம் கட்ட மேம்பால பணிகளுக்காக ரூ.152 கோடியில் டெண்டர் கோரப்பட உள்ளது. இன்னும் ஒரிரு மாதங்களில், இரண்டாம் கட்ட மேம்பால பணிகள் துவங்கும். முதல் கட்ட மேம்பால பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளன. 

உக்கடம்-ஆத்துபாலம் மேம்பாலத்தில் மூன்று இடங்களில் இறங்குதளங்கள், அமைக்கப்பட உள்ளன. போத்தனூர் பிரிவு, ஆத்துபாலம், உக்கடம் பேருந்துநிலையம் ஆகிய மூன்று பகுதிகளில் யூ வடிவிலான ஏறுதளம் மற்றும் இறங்குதளங்கள் அமைக்கப்பட உள்ளன,’’என்றனர்.

இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ உக்கடம் - ஆத்துபாலம் மேம்பால பணிகளில் உக்கடம் முதல் கரும்புக்கடை வரை நிலம் கையகப்படுத்தப்பட்டு முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கரும்புக்கடை முதல் ஆத்துபாலம் வரையிலான இரண்டாம் கட்ட மேம்பால பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவில் துவங்கும். இதற்காக கருத்துகேட்பு கூட்டங்கள் நடத்தப்படும். பின்னர், நில உரிமையாளர்களின் ஒப்புதலுடன் நிலம் கையகப்படுத்தப்பட்டு அதற்கான இழப்பீடுகள் உடனடியாக வழங்கப்படும்,’’ என்றனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...