ஏழைகளின் துயர் துடைக்கவே அம்மா மினி கிளினிக்குகள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு!

கோவை: ஏழைகளின் துயர் துடைக்கவே அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை: ஏழைகளின் துயர் துடைக்கவே அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணப்ப நகா்‌, ரத்தினபுரி பகுதிகளில்‌ முதலமைச்சரின்‌ அம்மா மினி கிளினிக்கை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்‌. இந்நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ தலைமை தாங்கினார்‌. விழாவில் பங்கேற்ற அமைச்சர் பேசியதாவது:-

`மக்களால்‌ நான்‌ மக்களுக்காகவே நான்‌' என்று வாழ்ந்து காட்டி நமது இதயங்களில்‌ வீற்றிருக்கும்‌ ஜெயலலிதா நல்லாசியுடன்‌ நடைபெற்றுக்‌ கொண்டிருக்கும்‌ தமிழக அரசானது தமிழ்நாடு முதலமைச்சரின்‌ தலைமையின்‌ கீழ்‌ ஏழை, எளிய மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை வாரி வழங்கியுள்ளது. கோயம்புத்தூரில்‌ போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்‌ பொருட்டு பாலங்கள்‌ கட்டப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில்‌ 5 அரசு கல்லூரிகள்‌ திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

அனைவருக்கும்‌ வீடு கட்டும்‌ திட்டத்தில்‌ இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான வீடுகள்‌ கோவை மாவட்டத்தில்‌ கட்டித்‌ தரப்பட்டுள்ளன. இதுபோன்ற எண்ணற்ற நலத்திட்டங்களில்‌ ஒன்றான முதலமைச்சரின்‌ அம்மா மினி கிளினிக்கை அறிமுகப்படுத்திய தமிழக முதலமைச்சர்‌ 14-ந்தேதி சென்னையிலும், 16-ந்தேதி சேலம்‌ மாவட்டத்திலும் துவக்கி வைத்துள்ளார்‌. கிராமங்கள்‌ மற்றும்‌ நகரப்‌ பகுதிகளில்‌ வாழும்‌ ஏழை, எளிய மக்களின்‌ உடல்‌நலனை கருத்தில்‌ கொண்டு சிகிச்சைக்கு வருபவர்களின்‌ வலி‌, அவர்களுக்கு ஏற்படும்‌ சிரமம்‌, செலவு மற்றும்‌ நேரத்தைக் குறைக்கும்‌ பொருட்டு இந்த அம்மா மினி கிளினிக்குகள்‌ தொடங்கப்பட்டுள்ளன.

சாதாரண காய்ச்சல்‌, தொற்றா நோய்‌ போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்க இந்த மினி கிளினிக்குகள்‌ பயன்படும். இந்த அம்மா மினி கிளினிக்குகள்‌ ஏழை, எளிய மக்கள்‌ அதிகம்‌ வசிக்கும்‌ ஆரம்ப சுகாதார நிலையம்‌ இல்லாத இடங்களில்‌ அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டத்துக்கு மட்டும்‌ 70 மினி கிளினிக்குகள்‌ வழங்கப்பட்டுள்ளன. இதில்‌ 5 நடமாடும்‌ கிளினிக்குகள்‌ ஆகும்‌. இதில்‌ முதற்கட்டமாக மாநகரப்பகுதிகளில்‌ 7 மினி கிளினிக்களும்‌, ஊரகப்பகுதிகளில்‌ 30 மினிகிளினிக்குகளும்‌ திறக்கப்பட உள்ளன. தற்போது மாநகராட்சி பகுதிகள்‌ மற்றும்‌ ஊரகப்‌ பகுதிகளில்‌ அம்மா மினி கிளினிக்குகள்‌ திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.

அம்மா மினி கிளினிக்கில்‌ ஒரு மருத்துவர்‌, ஒரு செவிலியர்‌ மற்றும்‌ ஒரு மருத்துவப் பணியாளர்‌ பணிபுரிவார்கள்‌. சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில்‌ அம்மா மினி கிளினிக்குகள்‌ செயல்படும்.‌ கிராமப்பகுதி மற்றும்‌ பேரூராட்சிப் பகுதிகளில்‌ காலை 8 மணி முதல்‌ மதியம்‌ 12 மணி வரையும்,‌ மாலை‌ 4 மணி முதல்‌ 7 மணி வரையும்‌ கிளினிக்குகள்‌ செயல்படும்‌. மாநகராட்சி மற்றும்‌ நகராட்சிகளில்‌ மேலும்‌ ஒரு மணி நேரம்‌ கூடுதலாக அதாவது இரவு 8 மணி வரை இயங்கும்‌. இதனால்‌ ஏழை மக்கள்‌ தங்களது அன்றாடப் பணிக்கு செல்லவும்‌ முன்னதாக பணி முடிந்து வீடு திரும்பிய பின்‌ செல்வதற்கும்‌ பயனுள்ளதாக இருக்கும்‌.

அம்மா மினி கிளினிக்கில்‌ மருத்துவப்‌ பரிசோதனை செய்த பின்னர்‌ உடனுக்குடன்‌ மருந்து மாத்திரைகள்‌ வழங்கப்படும்‌. தொற்றா நோய்களுக்கான சிகிச்சை போன்ற நோய்கள்‌ தொடர்பான அனைத்து சிகிச்சை சிறு காய்ச்சல்‌ மற்றும்‌ சளி, காய்ச்சல்‌ ஆகியவற்றுக்கான சிகிச்சை, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவற்றுக்கான சிகிச்சை, கர்ப்பிணி பெண்கள்‌, மகளிர்‌ குழந்தைகளுக்கான பொதுவான சிகிச்சை, வயது முதிர்ந்தவர்களுக்கான சிகிச்சைகள்‌ வழங்கப்படும்‌. சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு இங்கு மாத்திரைகள்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌.

ரத்தத்தில்‌ உள்ள சர்க்கரை அளவு, ஹெச்.பி அளவு அதாவது ரத்தசோகை உள்ளதா என்பதற்கான பரிசோதனை, சிறுநீரில்‌ உள்ள சர்க்கரை மற்றும்‌ அல்புமின்‌ அளவு பரிசோதனை, சிறுநீர்‌ மூலம்‌ கர்ப்பத்தை உறுதி செய்யும்‌ சோதனை போன்ற பரிசோதனை வசதி மற்றும் காய்ச்சல்‌, சளி, வயிற்றுப்போக்கு, வாந்தி, சிறு காயங்களுக்கான மருந்துகளும்‌ உள்ளன. மேலும்‌ தொற்றா நோய்களான சர்க்கரை மற்றும்‌ உயர்‌ ரத்த அழுத்த மாத்திரைகள்‌ போதுமான அளவு உடனுக்குடன்‌ வழங்கப்படும்‌.

கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ முதலமைச்சரின்‌ சிறப்பு மருத்துவத் திட்டங்களில்‌ அம்மா ஆரோக்கியத்‌ திட்டம்‌, டாக்டர்‌.முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவித்‌ திட்டம்‌, நடமாடும்‌ மருத்துவமனைத்‌ திட்டம்‌, கர்ப்பிணித்‌ தாய்மார்களுக்கு ரூபாய்‌ 4,000 வழங்கும்‌ திட்டம்‌, அம்மா முழு உடல்‌ பரிசோதனை திட்டம்‌, மகளிருக்கான பிரத்யேக அம்மா மகளிர்‌ முழு உடல்‌ பரிசோதனைத்‌ திட்டம்‌, 104 மருத்துவ சேவை மையம்‌ மூலம்‌ மருத்துவ ஆலோசனைகள்‌ வழங்கும்‌ திட்டம்‌ போன்றவை மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

தமிழக முதல்வர்‌ அறிவித்துள்ள திட்டத்தினைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்தில்‌ பொங்கல்‌ பரிசு தொகுப்பு வழங்கும்‌ திட்டத்தில்‌ 10 லட்சத்து 11 ஆயிரத்து 865 தகுதியுள்ள அரிசி பெறும் குடும்ப அட்டைதாராகளுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, 20 கிராம்‌ முந்திரி, உலர்‌ திராட்சை, ஏலக்காய்‌, ஒரு முழு நீளக்‌ கரும்பு அடங்கிய பொங்கல்‌ பரிசு தொகுப்புடன்‌ ரூ.2,500 ரொக்கம்‌ ஜனவரி 4-ந்தேதி முதல்‌ வழங்கப்படவுள்ளது. கோவை மாவட்டத்தில்‌ ரூ.16.87 கோடி மதிப்பில்‌ பொங்கல்‌ பரிசு தொகுப்பும்‌, தலா 2,500 வீதம்‌ ரொக்கமாக ரூ.252.96 கோடி என மொத்தமாக ரூ.269.83 கோடி மதிப்பில்‌ வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். 



இதைத்‌ தொடர்ந்து, 10 கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா தாய்‌ சேய்‌ ஊட்டச்சத்து பெட்டக்கத்தை அமைச்சர் வழங்கினார்.விழாவில்‌ கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினா்‌ ஆர்‌.ஜி.அருண்குமார், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினா்‌ அம்மன்‌ கே.அர்ச்சுணன், மாநகராட்சி துணை ஆணையாளர்‌ எஸ்‌.மதுராந்தகி, நகர்‌ நல அலுவலர்‌ ராஜா, மத்திய மண்டல உதவி ஆணையர்‌ மகேஷ் கனகராஜ்‌, உதவி செயற்பொறியாளர்‌ கருப்பசாமி, மண்டல சுகாதார அலுவலர்‌ ராதாகிருஷ்ணன்‌, மாநகராட்சி அலுவலர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டனர்‌. 

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...