கோவை: நடிகர் ரஜினிகாந்த் பூரண நலமுடன் வாழ அவரது `தர்பார்' திரைப்பட பேனரை வைத்து அவரது ரசிகர்கள் வழிபாடு செய்தனர்.
கோவை: நடிகர் ரஜினிகாந்த் பூரண நலமுடன் வாழ அவரது `தர்பார்' திரைப்பட பேனரை வைத்து அவரது ரசிகர்கள் வழிபாடு செய்தனர்.
கோவை உக்கடம் ராஜ செட்டியார் வீதியில் உள்ள ஆதி விநாயகர் கோவிலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் `தர்பார்' பட பேனருக்கு பொட்டு வைத்தும், ஆரத்தி எடுத்தும் வழிபட்டனர். அவரது ரசிகர்கள் ரஜினியின் அரசியல் குறித்த அறிவிப்பு தங்களுக்கு பேரிடிதான் என்றாலும் அதற்கு ஒருபுறம் விமர்சனமும் மற்றொருபுறம் வரவேற்பும் இருந்து வருவதாக தெரிவித்தனர்.
மேலும் ரஜினியின் உடல்நிலை தங்களுக்கு முக்கியம் எனவும், அவர் அரசியலுக்கு வராவிட்டாலும் எப்போதும் அவருடன் இருப்போம் எனவும் உருக்கத்துடன் தெரிவித்தனர்.