கோவையில், பனிப்பொழிவுக்கு மத்தியில் திடீரென வெளுத்து வாங்கிய மழை!

கோவை: கோவையில் பனிப்பொழிவுக்கு மத்தியில் இன்று காலை திடீரென கனமழை வெளுத்து வாங்கியது.


கோவை: கோவையில் பனிப்பொழிவுக்கு மத்தியில் இன்று காலை திடீரென கனமழை வெளுத்து வாங்கியது.

தமிழகத்தில் பல்வேறுவிதமான புயல் சின்னங்கள் உருவாகியநிலையில் கோவையில் பலத்த மழை பெய்து வந்தது. அதனைத் தொடர்ந்து பருவமழையும் பெய்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு இருக்கிறது. இது கடந்த வருடத்தைக் காட்டிலும் அதிகமாகக் காணப்படுகிறது. மொத்தத்தில் கோவை மக்கள் மழையைக் கடந்து பனிப்பொழிவில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை கடுமையான பனிப்பொழிவு இருந்தது. நடைபாதை வியாபாரிகள் மற்றும் காலையில் நடைபயிற்சி செல்லக்கூடியவர்கள் அரசு அலுவலகங்களுக்குச் செல்பவர்கள் என அனைவரும் ஸ்வெட்டர் அணிந்து சென்றனர்.

இதற்கிடையே இன்று அதிகாலையில் இருந்தே வானம் மப்பும் மந்தாரமுமாகக் காணப்பட்டது. மக்கள் அனைவரும் இது பனிப்பொழிவின் தாக்கமென்று நினைத்தார்கள். ஆனால், திடீரென காலை 8 மணிக்கு சாரல் மழை பெய்தது.

நேரம் செல்லச் செல்ல அது கன மழையாக மாறியது. இதனால் வியாபாரிகள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் என அனைவரும் தட்டுத்தடுமாறி மழையில் சிக்கி நனைந்தபடி சென்றனர். குறிப்பாக கோவை காந்திபுரம், டெஸ்டூல் பாலம், 100 அடி சாலை, ஒப்பணக்கார வீதி, சாய்பாபா காலனி, வேலாண்டிபாளையம், சித்தாபுதூர், பீளமேடு, கலெக்டர் அலுவலகம், ரயில் நிலையம், அவிநாசி ரோடு, நஞ்சப்பா ரோடு, சிங்காநல்லூர் பேருந்து நிலையம் என கோவை மாநகர் முழுவதும் கனமழை பெய்தது. திடீர் கனமழையால் பொதுமக்களும், வியாபாரிகளும் கடும் அவதிக்குள்ளானார்கள்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...