கோவை: கோவை மாவட்டத்தில் 270 கோடி மதிப்பில் பொங்கல் பரிசு வழங்கப்படுவதாக அமைச்சர் எஸ். பி வேலுமணி கூறியுள்ளார்.

கோவை கண்ணப்பன் நகர் ரத்தினபுரியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத்துறையின் கீழ் அம்மா மினி கிளினிக்குகளை அமைச்சர் எஸ். பி வேலுமணி நேற்று திறந்து வைத்தார். அப்போது ரூபாய் 2,000 மதிப்பிலான அம்மா தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகங்களை கர்ப்பிணிகளுக்கு வழங்கினார் .
இதையடுத்து அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், `பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தில் கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 11 ஆயிரத்து 865 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, தலா 20 கிராம் முந்திரி, உலர் திராட்சை ,ஏலக்காய் மற்றும் முழுநீள கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூபாய் 2,500 ரொக்கம் ஆகியவை வரும் ஜனவரி 4 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.
கோவை மாவட்டத்தில் ரூபாய் 16. 87 கோடி மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு தலா ரூபாய் 2,500 வீதம் ரொக்கமாக ரூபாய் 252.96 கோடியும் என மொத்தம் ரூபாய் 269. 83 கோடி மதிப்பில் வழங்கப்பட உள்ளது' என்றார். இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் கே அர்ஜுனன், அருண்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.