கோவை: துடியலூர் பகுதி மக்கள் தங்கள் பகுதியில் கொரோனா பரவாமலிருக்க வேப்ப மரத்துக்கும் அரச மரத்துக்கும் திருமணம் செய்து வைத்து விநோத வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கோவை துடியலூரை அடுத்த அப்பநாயக்கன் பாளையத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமையான கருப்பராயன் கோவில் உள்ளது. இங்கு தல விருட்சமாக அரச மரமும், வேப்ப மரமும் உள்ளது.
இந்நிலையில் நோய் பரவாமல் இருக்கவும் உலக நன்மை வேண்டியும் கருப்பராயன் கோவிலில் உள்ள வேப்ப மரத்தை பெண் கடவுளாகவும், அரசமரத்தை ஆண் கடவுளாகவும் பாவித்து திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரசமரத்துக்கு பட்டு வேட்டி துண்டும், வேப்பமரத்துக்கு பட்டுப் புடவையும் சாற்றி மாலை அணிவித்தனர். புரோகிதர்கள் யாக குண்டம் வளர்த்து வேத மந்திரங்கள் ஓதி திருமணம் நடத்தி வைத்தனர். பெண்கள் தங்கத் தாலியை மஞ்சள் கயிற்றில் கோர்த்து வேம்பு மற்றும் அரச மரத்தைச் சுற்றி கட்டி மூன்று முடிச்சு போட்டு தாலி கட்டினர். இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு வளையல் மற்றும் மஞ்சள் கயிறுகள் வழங்கப்பட்டன.