கோவை: கோவை பீளமேடு பாரதி காலனி பகுதியில் சாலையில் மணிபர்ஸ் ஒன்று கிடந்தது. இதை அந்தப் பகுதியைச் சேர்ந்த தியாகு, வெள்ளியங்கிரி ஆகியோர் கண்டெடுத்தனர்.
கோவை: கோவை பீளமேடு பாரதி காலனி பகுதியில் சாலையில் மணிபர்ஸ் ஒன்று கிடந்தது. இதை அந்தப் பகுதியைச் சேர்ந்த தியாகு, வெள்ளியங்கிரி ஆகியோர் கண்டெடுத்தனர். அதில் ஒரிஜினல் ஆதார் கார்டு, பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், ஏ.டி.எம் கார்டு மற்றும் ரூபாய் 4,500 ஆகியவை இருந்தன. அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு விசாரித்தபோது அது சிங்காநல்லூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்குச் சொந்தமானது என்பதும் அவர் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது தவறவிட்டதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சாலையில் கண்டெடுத்த மணிபர்சை அவர்கள் பீளமேடு போலீசாரிடம் மணி ஒப்படைத்தனர். போலீசார் கிருஷ்ணமூர்த்தியை வரவழைத்து அவரிடம் மணிபர்சை ஒப்படைத்தனர். அவர் நேர்மையுடன் நடந்து கொண்ட அந்த நண்பர்களுக்கு பணிவான நன்றி தெரிவித்தார்.