கோவை: கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று இரவு திடீரென சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 1 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை. டிசம்பர். 31- கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார்நேற்று இரவு திடீரென சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 1 லட்சம்ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை டவுன்ஹால் பகுதியில் முதன்மைக் கல்வி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பள்ளிகளின் உரிமத்தைப் புதுப்பிக்க லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்று இரவு 8 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உள்ளிட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கோவை ரேஸ் கோர்சில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் உஷாவின் முகாம் அலுவலகத்திலும் சோதனை நடத்தினர்.
போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூபாய் ஒரு லட்சம் இருப்பது தெரியவந்தது. அந்தப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் புத்தாண்டுப் பரிசு மற்றும் பள்ளி உரிமம் புதுப்பித்தல் ஆகியவற்றுக்காக கொடுக்கப்பட்ட லஞ்சப் பணம் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.