சமூக ஆர்வலர் வீட்டில் கல் எறிந்து கொலை மிரட்டல் விடுக்கும் செங்கல் சூளை உரிமையாளர்கள்; பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு!

கோவை: சமூக ஆர்வலர் வீட்டில் கல் எறிந்து கொலை மிரட்டல் விடுக்கும் செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: சமூக ஆர்வலர் வீட்டில் கல் எறிந்து கொலை மிரட்டல் விடுக்கும் செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை சின்னத்தடாகம் சுற்றியுள்ள ஐந்து பஞ்சாயத்துகளில் கனிம வள கொள்ளையில் ஈடுபடுபவர்களை தடுத்து நிறுத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திரன் மற்றும் கணேஷன் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், மகேஸ்வரி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று செம்மண் திருடியபோது, லாரியை பிடித்து வடக்கு வட்டாட்சியருக்கு தகவல் அளித்து உள்ளனர்.

இந்த நிலையில், செங்கல் சூளை உரிமையாளர்கள் மகேஸ்வரி, கணேஷ் உள்ளிட்ட சிலரை தாக்கியதோடு மண் கடத்தலில் ஈடுபட்ட லாரியை மீட்டு சென்றனர்.

இதனையடுத்து, செங்கல் சூளை உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கணேஷ், ராஜேந்திரன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இதனையடுத்து, கனிம வள கொள்ளைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் கணேஷ் இல்லத்திற்கு சென்ற 50க்கும் மேற்பட்டோர் கல் வீசி கண்ணாடிகளை உடைத்துள்ளனர்.

மேலும் வழக்கை திரும்பப் பெறவில்லை எனில் குடும்பத்திலுள்ள நான்கு பேரையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர். இதேபோல, ராஜேந்திரன் என்பவரது வீட்டின் வாயிற்கதவை சூளை உரிமையாளர்களோடு வந்த காவல் துறையினர் உதைத்து தள்ளியதாக குற்றம்சாட்டினர்.

செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது பல்வேறு புகார்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையிடம் கொடுத்தும் பலனளிக்கவில்லை என்றும் அலைக்கற்றை ஊழலை விட அதிகமான அளவு கனிம வள கொள்ளை நடந்துள்ளதாக தெரிவித்தனர். உயிரே போனாலும் வழக்கை திரும்பப் பெறப்போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.



கணேஷின் மனைவி நிறைமாத கர்ப்பிணி என்று கூட பாராமல், அவரது வீட்டில் கற்களை வீசி கொலை மிரட்டல் விடுத்த செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கணேஷ் மற்றும் ராஜேந்திரனின் குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தவர்கள் தங்களது உயிருக்கு செங்கல் சூளை அதிபர்களால் ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...