கோவை: தயாரிப்பு நிறுவனங்களின் இரட்டை விலை கொள்கையை கண்டித்து விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: தயாரிப்பு நிறுவனங்களின் இரட்டை விலை கொள்கையை கண்டித்து விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பினர் விரைவில் விற்பனையாகக்கூடிய நுகர்பொருள் நிறுவனங்களைக் கண்டித்து கருப்பு சட்டை அணிந்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தயாரிப்பு நிறுவனங்கள் இரட்டை விலைக் கொள்கைகளை கடைப்பிடிப்பதாகவும் அதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். விநியோகஸ்தர்கள் மூலம் விற்பனை செய்யும் சில்லரை வணிகத்துக்கு அதிக விலையும் ஆன்லைன் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குறைந்த விலையும் அளிப்பதாக குற்றம் சாட்டினர்.
இந்திய அளவில் விரைவாக விற்பனையாகக்கூடிய நுகர்பொருள்கள் 90 சதவீதம் சில்லரை மற்றும் மொத்த விற்பனையாளர்கள் மூலமே நடைபெறுவதாகத் தெரிவித்த அவர்கள் 10 சதவீதம் மட்டுமே ஆன்லைன், ரிலையன்ஸ், ஜியோமார்ட், பிக்பாஸ்கெட் ஆகிய நிறுவனங்களில் நடைபெறுவதாகதெரிவித்தனர். 10 சதவீதம் மட்டுமே விற்பனை செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை அளித்து 90 சதவீதம் விற்பனை செய்யும் சில்லரை வணிகத்தை அளிக்கும் நோக்குடன் இந்த செயல்பாடு அமைந்திருப்பதாகவும் கூறினர்.
இத்தகைய சூழலில் இரட்டை விலைக் கொள்கையை எஃப்.எம்.சி.ஜி (FMCG) தயாரிப்பு நிறுவனங்கள் மாற்றிக்கொள்ளத் தவறினால் தமிழ்நாடு நுகர்வோர் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் வணிகர் சங்கங்களோடு இணைந்து அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க மாநில தலைவர் வெங்கடேஷ் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவையைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.