கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுவிஷயத்தில் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாநகராட்சியில் 32 அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளன. இதில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கான சம்பளத்தை ஒப்பந்ததாரர்களிடம் மாநகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. ஆனால் ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்குவதில்லை என தூய்மைப் பணியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து ஒப்பந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் கூறுகையில்,`கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. ஊரடங்கில் பல துன்பங்களை அனுபவித்துவிட்டோம். அதேபோல இப்போதும் சம்பளம் பாக்கி காரணமாக துன்பங்களை அனுபவித்து வருகிறோம். இந்த விசயத்தில் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்றார்.
மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், `ஒப்பந்ததாரர்களிடம் ஒவ்வொரு மாதமும் 22-ம் தேதி முதல் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கான சம்பளத்தை வழங்கி விடுகிறோம். ஒப்பந்ததாரர்கள் சிலர் தாமதப்படுத்துகின்றனர். இதனால் புகார் எழுகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.