கோவை: ஊத்துக்குளியில் இருந்து ஈஸ்வரன் என்பவருக்குச் சொந்தமான லாரி ஒன்று பஞ்சு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இருகூரில் உள்ள தனியார் பஞ்சு மில்லுக்கு வந்தது.

அங்கு பஞ்சு மூட்டைகளை வேண்டாமென்று லாரியை திருப்பி அனுப்பியதால் மீண்டும் ஊத்துக்குளி நோக்கிச் செல்வதற்காக டிரைவர் வடிவேலு லாரியைத் திருப்பினார். அப்போது எதிர்பாராதவிதமாக அருகே உள்ள மின் கம்பி மீது பட்டு உராய்ந்ததால் திடீரென லாரி தீப்பிடித்தது.
தகவலறிந்த சூலூர் மற்றும் பீளமேடு தீயணைப்பு நிலையங்களில் இருந்து நிலைய அதிகாரி கோபால் தலைமையில் 2 தீயணைப்பு வண்டிகளில் வந்த 15 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அதற்குள் லாரி பாதிக்கும் மேல் எரிந்து நாசமானது.