கோவை: 10 பவுன் நகையை நூதனமுறையில் அபகரித்த உறவுப்பெண்ணிடமிருந்து நகையை மீட்டுத்தருமாறு கலெக்டரிடம் தம்பதி கண்ணீர் மனு கொடுத்தனர்.

கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணியை இன்று மதியம் கணவன், மனைவி இருவர் வந்து சந்தித்தனர். அப்போது அவர்கள் கண்ணீர் மல்க மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
என்னுடைய பெயர் சாந்தகுமார், என் மனைவி பெயர் முருகேஸ்வரி. நாங்கள் கோவை பீளமேடு, காந்திமா நகர் பகுதியில் வசித்து வருகிறோம். கடந்த சில வாரங்களுக்கு முன்பு எங்கள் வீட்டின் அருகே வசிக்கும் உறவுக்காரப்பெண் என் மனைவி முருகேஸ்வரியிடம் வந்து நீங்கள் அணிந்திருக்கும் 11 பவுன் செயின் போலவே எனக்கும் செய்ய வேண்டும், கொடுங்கள் என வாங்கிச் சென்றார். அதன்பிறகு கொடுத்து விட்டார். அதை என் மனைவி வீட்டின் பீரோவில் வைத்து விட்டார்.
இரண்டு நாள் கழித்து பார்க்கும்போது அந்த செயின் கருத்துப்போய் இருந்தது தெரிய வந்தது. உறவுக்காரப் பெண் 11 பவுன் நகையை நூதனமான முறையில் ஏமாற்றி கவரிங் நகையை மாற்றி கொடுத்திருக்கிறார். இதுகுறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். உறவுக்கார பெண் அபிநயாவை அழைத்து விசாரித்தனர். அதற்கு அந்தப் பெண் நான் இவர்களிடம் நகையை வாங்கவில்லை எனக் கூறிவிட்டார். அன்றுமுதல் நாங்கள் மன உளைச்சலுடன் காணப்படுகிறோம். இதுகுறித்து போலீசார் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட கலெக்டர் தலையிட்டு உடனடியாக எங்களது பத்தே கால் பவுன் நகையை மீட்டுத் தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் ராஜாமணி சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு மனுவை அனுப்பி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவு பிறப்பித்தார்.