எங்களை ஏமாற்றியது உங்களை வாழ்நாள் முழுவதும் உறுத்திகொண்டே இருக்கும்: இனி எந்த போஸ்டரும் ஒட்டமாட்டோம் - கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஆவேசம்!

கோவை: கோவை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்துள்ள சூழலில், இது தங்களை ஏமாற்றியுள்ளதாகவும், இனிமேல் அவருக்காக எந்த போஸ்டர்களையும் ஒட்டப்போவதில்லை என்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்துள்ள சூழலில், இது தங்களை ஏமாற்றியுள்ளதாகவும், இனிமேல் அவருக்காக எந்த போஸ்டர்களையும் ஒட்டப்போவதில்லை என்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகியாக இருப்பவர் சத்ய மூர்த்தி. கடந்த 20 ஆண்டுகளாக அரசியல் பிரவேசம் குறித்து இழுத்தடித்து வந்த நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பை டிசம்பர் 31ம் தேதி வெளியிடுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அரசியலுக்கு வரப்போவதில்லை என்று இன்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சத்திய மூர்த்தி என்பவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பது:

ரஜினிக்காக குடும்பத்தை, குழந்தைகளை பார்க்காமல் கடுமையாக உழைத்தோம். தலைவரின் இலக்கை அடைய கடுமையாக உழைத்தோம். எத்தனை ஆண்டுகள் வாழப்போகிறோம்? முடியவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? எதற்கு நடிக்கிறீர்கள்? அவர் ரசிகர்களுக்காக எதுவும் செய்யப்போவது இல்லை. இனி லட்சக்கணக்கில் செலவு செய்து ரசிகர் காட்சிகளை எடுக்க மாட்டோம். இனி போஸ்டர் ஓட்டமாட்டோம். எங்களை ஏமாற்றிவிட்டீர்கள். இன்று கருப்பு நாள். எங்களை ஏமாற்றியது உங்கள் நெஞ்சில் உறுத்திக் கொண்டே இருக்கும். இவ்வாறு சத்ய மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...