கிராம சபைக் கூட்டம் நடத்த அனுமதிக்காத போலீசைக் கண்டித்து முற்றுகைப் போர்: தி.மு.க.வினர் கைது!

கோவை: கிராம சபைக் கூட்டம் நடத்த அனுமதிக்காத போலீசைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்திய தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.



கோவை: கிராம சபைக் கூட்டம் நடத்த அனுமதிக்காத போலீசைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்திய தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தி.மு.க. சார்பில் கோவையில் வார்டுதோறும் வார்டுசபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இதற்கு கோவை மாநகர காவல்துறை அனுமதி மறுத்து, மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்துபவர்களை கைது செய்து வருகின்றனர்.



இந்நிலையில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்த அனுமதிக்காத மாநகர காவல்துறையைக் கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று மாநகர காவல் ஆணையாளர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. தி.மு.க எம்.எல்.ஏ. கார்த்திக் தலைமையில் அண்ணாசிலையில் இருந்து ஊர்வலமாக வந்த தி.மு.க.வினரை செஞ்சிலுவைச் சங்கம் முன்பாக காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.



செஞ்சிலுவைச் சங்கம் முன்பாக இரண்டு அடுக்குகளாக காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி தி.மு.க.வினரை தடுத்தனர்.



அப்போது போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அ.தி.மு.க.வினர் விதிகளை மீறி நடத்தும் கூட்டங்களுக்கு அனுமதி கொடுக்கும் காவல்துறையினர் தி.மு.க.வினருக்கு மட்டும் அனுமதி மறுப்பதாக குற்றம் சாட்டினர்.



இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மற்றும் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் உட்பட 600-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். போராட்டம் காரணமாக செஞ்சிலுவைச் சங்கம் முன்பாக அரை மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...