கோவை மாநகராட்சியில்‌ சீர்மிகு நகரத்‌ திட்டத்தின் கீழ்‌ நடைபெற்று வரும்‌ வளர்ச்சிப்‌ பணிகள்‌ மற்றும்‌ குடிநீர் பணிகள்‌ குறித்து ஆய்வு கூட்டம்!

கோவை: கோவை மாநகராட்சியில்‌ பிரதான அலுவலகத்தில்‌ சீர்மிகு நகரத்‌ திட்டத்தின் கீழ்‌ நடைபெற்று வரும்‌ வளர்ச்சிப்‌ பணிகள்‌ மற்றும்‌ குடிநீர் பணிகள்‌ குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்‌ கூட்டம்‌ இன்று மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சியில்‌ பிரதான அலுவலகத்தில்‌ சீர்மிகு நகரத்‌ திட்டத்தின் கீழ்‌ நடைபெற்று வரும்‌ வளர்ச்சிப்‌ பணிகள்‌ மற்றும்‌ குடிநீர் பணிகள்‌ குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்‌ கூட்டம்‌ இன்று மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது.



இந்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ கோவை மாநகராட்சியில்‌ சீர்மிகு நகரத்‌ திட்டத்தின்கீழ்‌ நடைபெற்று வரும்‌ பல்வேறு வளர்ச்சிப்‌ பணிகளான குளங்களை புனரமைத்து மேம்படுத்தும்‌ பணிகள்‌ மற்றும்‌ பூங்காக்கள்‌ அமைத்தல்‌ பணி, சாலைகள்‌ அமைத்தல்‌, பாதாள சாக்கடை அமைத்தல்‌, குடிநீர் வழங்குதல்‌ போன்ற பணிகள்‌ நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பொழுதுபோக்கு பூங்காக்கள்‌, சிறுவர்‌ பூங்காக்கள்‌, விளையாட்டுத்திடல், தெருவிளக்குகள்‌, சாலையோர நடைபாதைகள்‌ ஆகிய பணிகள்‌ நடைபெற்று வருவதை குறித்தும்‌, இத்திட்டத்தின்‌ கீழ்‌ உக்கடம்‌ பெரியகுளம், வாலாங்குளம்‌, முத்தண்ணன்‌ குளம்‌ போன்ற கோவை மாநகரின் மையப்பகுதியில்‌ உள்ள பல்வேறு குளங்கள்‌ புதுப்பொழிவு பெற்று சீரமைக்கும் பணிகள்‌ நடைபெற்று வருவது குறித்தும்‌, சீர்மிகு நகரத்‌ திட்டத்தின்கீழ்‌ மாதிரி சாலைகள்‌ அமைக்கப்பட்டு வருவது குறித்து மாநகராட்சி ஆணைய‌ர் கேட்டறிந்தார்.

மேலும், மாதிரி சாலையில்‌ மின்சாரம்‌, மிளிரும்‌ விளம்பர பலகைகள்‌ மற்றும்‌ தொலைத்தொடர்பு வசதிகள்‌ போன்ற அனைத்து பயன்பாடுகளும்‌ நிலத்தடியில் செல்லும்‌ வண்ணம்‌ வடிவமைக்கப்பட்டு நடைபாதை ஓரங்களில்‌ நவீன மின்விளக்கு வசதிகள்‌ ஆகிய பணிகள்‌ நடைபெற்று வருவதைக்‌ குறித்தும்‌, பாதாளசாக்கடை மற்றும்‌ கழிவுநீர் வெளியேற்றப்படும்‌ முறைகள்‌ குறித்தும்‌, முடிவுற்ற பணிகள்‌ குறித்தும்‌, மேலும்‌, சாலை வசதிகள்‌ குறித்தும்‌, உக்கடம்‌ பெரியகுளம்‌, வாலாங்குளம்‌, செல்வசிந்தாமணிக்‌ குளம்‌, கிருஷ்ணம்பதி குளம்‌, செல்வம்பதி, குமாரசாமி குளம்‌, சிங்காநல்லூர்‌ குளம்‌, குறிச்சி குளம்‌ ஆகிய குளங்களில்‌ மேற்கொள்ளப்பட்டு வரும் ‌பணிகள்‌ குறித்தும்‌, கோவை மாநகராட்சியில்‌ 24 மணிநேர குடிநீர்‌ வழங்கும்‌ பணிகள்‌ குறித்தும்‌, ஆர்‌.எஸ்‌.புரம்‌ டி.பி.சாலையில்‌ மாதிரி சாலைகள்‌, மல்டி லெவல்‌ கார் பார்க்கிங்‌ அமைக்கப்பட்டு வருவது குறித்தும்‌ கேட்டறிந்தார்.

பின்னர்‌, பந்தைய சாலையில்‌ மாதிரி சாலை அமைக்கப்பட்டு வரும்‌ பணிகள்‌ குறித்தும்‌, நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையங்கள்‌ குறித்தும்‌ கேட்டறிந்த பின்னர்‌, அதனைத்‌ தொடர்ந்து மாநகராட்சியில்‌ வார்டு வாரியாக குடிநீர் வழங்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை குறித்தும்‌, மழைக்காலங்களில்‌ மழைநீர் சேமிப்பதற்காக வீடுகளில்‌ மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது குறித்தும்‌ ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ அனைத்துப்‌ பணிகளை தொய்வின்றி விரைந்து முடிக்குமாறும்‌ தொடர்புடைய அலுவலர்களிடம்‌ கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில்‌ துணை ஆணையாளர்‌ எஸ்‌.மதுராந்தகி, மாநகரப்‌ பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, செயற்பொறியாளர்கள்‌ ஞானவேல்‌, (ஸ்மார்ட்‌ சிட்டி) சரவணக்குமார்‌, (24X7 குடிநீர் திட்டம்‌) பார்வதி, அனைத்து மண்டல பொறியாளா்கள்‌, செயற்பொறியாளர்கள்‌, உதவி பொறியாளா்கள்‌, உதவி செயற்பொறியாளா்கள்‌, மற்றும்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...