கோவை: கோவை மாவட்டத்தில் 9 மாதங்களுக்கு பின்னர் இன்று முதல் 257 டாஸ்மாக் மதுபார்கள் திறக்கப்பட்டன.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபார்கள் மூடப்பட்டிருந்தன. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட போதிலும், அதனுடன் இணைந்த பார்களை திறக்க அரசு அனுமதி அளிக்கவில்லை.
இதனிடையே, கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி டாஸ்மாக் பார்களை திறக்க தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, கோவை மாவட்டத்தில் கடந்த 9 மாதங்களுக்கு பின்னர் டாஸ்மார் பார்கள் இன்று முதல் திறக்கப்பட்டன.
இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் மொத்தம் 257 டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு வருபவர்களுக்கு கிருமி நாசினி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 50 சதவீத இருக்கைகள் மட்டுமே இருக்க வேண்டும், என டாஸ்மாக் பார் உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது", என்றார்.