அதிமுகவினரை கொண்டு பொங்கல் டோக்கன் விநியோகம்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினரால் பரபரப்பு!

கோவை: கோவையில் அதிமுகவினரை கொண்டு பொங்கல் டோக்கன் வழங்கப்படுவதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திமுகவினர் திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவையில் அதிமுகவினரை கொண்டு பொங்கல் டோக்கன் வழங்கப்படுவதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திமுகவினர் திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 



பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம், மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், பையா கவுண்டர், சேனாதிபதி ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக வந்த திமுகவினர் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். சுமார் 200க்கும் மேற்பட்ட திமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்ததைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தின் வாயில் கதவுகள் மூடப்பட்டது. 



இதனையடுத்து, ஆவேசமடைந்த திமுகவினர் ஆட்சியர் அலுவலக கதவுகளை சத்தமாக தட்டி, கதவு திறந்து உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. 

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே தமிழக அரசையும், அதிமுகவையும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினருடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், திமுகவினர் தொடர்ச்சியாக முழக்கங்கள் எழுப்பி எதிர்ப்பை தெரிவித்த படி இருந்தனர்.



பின்னர் மாவட்ட ஆட்சியர் தற்போது அலுவலகத்தில் இல்லை என தெரிவித்த காவல்துறையினர், மாவட்ட வருவாய் அலுவலரிடம் திமுக நிர்வாகிகளை அழைத்துச் சென்றனர். அவரிடம் கோரிக்கைகள் குறித்த மனுவினை வழங்கிய திமுக நிர்வாகிகள் , போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். முற்றுகைப் போராட்டம் காரணமாக அரை மணி நேரத்துக்கும் மேலாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

இது தொடர்பாக கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் பேசுகையில், பொங்கல் டோக்கனை அதிமுகவினரே வழங்குகின்றனர். அதிமுகவினரே டோக்கன் அடித்து விநியோகம் செய்கின்றனர் எனவும் இதனை தடுக்க வேண்டிய காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் அமைதியாக இருப்பதாகவும் இது மோசமாக முன் உதாரணம் என தெரிவித்தார். 



மேலும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உத்தரவு காரணமாக அதிமுகவினர் இப்படி செய்வதாகவும், உடனடியாக இதை தடுக்காவிட்டால் நாளை கோவை மாவட்டம் முழுவதும் போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

இந்த டோக்கன் விநியோகம் மாவட்ட ஆட்சியருக்கு தெரிந்தே நடைபெறுகின்றது எனவும், ஆட்சியரிடம் முறையிட வந்தால் ஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டு இருக்கின்றது எனவும், காவல் துறை அதிமுகவின் கைக்கூலி தனமாக செயல்படுகின்றது எனவும் குற்றம்சாட்டினார்.

மேலும், அதிமுகவினர் டோக்கன் வழங்குவதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். இந்த போராட்டம் காரணமாக பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...