கோவை: கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்துக்கு 2020 - 2021ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கோவை ஆடிஸ் தெருவில் உள்ள மன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமது உயிரையும் துச்சமாக கருதி மக்கள் பணியாற்றி அதனால் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த பத்திரிக்கையாளர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து, 2020 - 2021ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் மன்றத்தின் தலைவராக தங்கராஜா, செயலாளராக ஏ.ஆர்.பாபு, பொருளாளராக முத்துப்பாண்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அதேபோல் துணைத்தலைவர்களாக பேச்சிக்குமார், பாலதண்டாயுதம், இணை செயலாளர்களாக மனோகரன், சீனிவாசன் ஆகியோரும் செயற்குழு உறுப்பினர்களாக சங்கீதா, ரமேஷ், ரகுபதி, கிருபாகரன், ரவிக்குமார், நித்தின் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக முன்னாள் செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.