கோவை: திட்டமிட்டபடி இன்று மாலை கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று தி.மு.க எம்.எல்.ஏ. நா.கார்த்திக் கூறியுள்ளார்.

கோவை டாடாபாத் பகுதியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் கோவை சிங்காநல்லூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், `கோவையில் தி.மு.க. சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டங்கள், கிராம சபை கூட்டம், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை கோவை மாவட்ட காவல்துறையினர் திட்டமிட்டு தடுத்து நிறுத்தி வருகின்றனர். ஆனால் அ.தி.மு.க.வினர் அனுமதி பெறாமலேயே பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்துகின்றனர். அதற்காக பெரிய பெரிய பேனர்களும் வைக்கின்றனர்.

தி.மு.க.வினர் ஏதேனும் ஆர்ப்பாட்டமும், போராட்டமும் நடத்தினால் கைது செய்து பொய் வழக்கு போடுகின்றனர். இன்று காலை முதலே கோவை மாவட்ட எல்லைப் பகுதிகளில் காவல்துறையினர் தி.மு.க.வினரை ஆர்ப்பாட்டத்திற்கு செல்லவிடாமல் தடுத்து வருகிறார்கள்.இதனைக் கண்டிக்கும்வகையில் இன்று மாலை திட்டமிட்டபடி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். காவல்துறையினர் தி.மு.க.வினர்மீது இதுபோன்று மேலும் மேலும் பொய் வழக்கு பதிவு செய்தால் கோவையில் தொடர்ந்து போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.