கோவை: தடையை மீறி மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்தியதாக கார்த்திக் எம்.எல்.ஏ உள்பட தி.மு.க.வினர் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கடந்த 4 நாட்களாக மக்கள் கிராம சபைக் கூட்டம் நடந்து வருகிறது.

கோவை மாநகர காவல்துறையினர் தடையை மீறி நடைபெற்று வரும் இந்தக் கூட்டம் நேற்று மாலை பழையூர் 60-வது வார்டு ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது.
தடையை மீறியதாக கார்த்திக் எம்.எல்.ஏ உள்பட தி.மு.க.வினர் 300 பேரை போலீசார் நேற்று மீண்டும் கைது செய்தனர். மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் வே.நா. உதயகுமார், செல்வராஜ், ஆனந்தன், கண்ணன், உமாமகேஸ்வரி, கல்பனா, அன்னம்மாள், பொதுக்குழு உறுப்பினர் முருகன், ராஜராஜேஸ்வரி, பகுதி பொறுப்பாளர்கள் நாகராஜ், சேக் அப்துல்லா, பசுபதி வார்டு செயலாளர்கள் சண்முகசுந்தரம், எத்திராஜ், மேகநாதன், குட்டி என்ற ராஜா முருகவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் திருச்சி ரோடு ஹைவேஸ் காலனி 73 - வது வார்டு பகுதியில் தடையை மீறி மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ், பகுதி பொறுப்பாளர் பதுருதீன், வார்டு செயலாளர் தண்டபாணி கோவை சுஜித் உள்பட 73 பேரை போலீசார் கைது செய்தனர்.