கோவையில் வீட்டை அபகரித்து மருமகள் மற்றும் பேரன் தன்னை கொடுமைப்படுத்துவதாக 85 வயது மூதாட்டி கண்ணீர் மல்க மனு!

கோவை: வீட்டை அபகரித்து விட்டு மருமகள் மற்றும் பேரன் தன்னை கொடுமைப்படுத்துவதாக 85 வயது மூதாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: வீட்டை அபகரித்து விட்டு மருமகள் மற்றும் பேரன் தன்னை கொடுமைப்படுத்துவதாக 85 வயது மூதாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் என்பவரது மனைவி பெரியம்மாள்(85). இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது பேரன் மற்றும் மருமகள் வீட்டை எழுதி வாங்கிக்கொண்டு மருத்துவ செலவுக்கு கூட பணம் கொடுப்பதில்லை என கூறி மனு அளித்தார்.

பின்னர் மூதாட்டி பெரியம்மாள் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் தனது மகனுடன் வசித்து வந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு 5 செண்ட் இடத்துடன் கூடிய வீட்டை தனது பேரன் கோபாலகிருஷ்ணன் பெயரில் எழுதி வைத்ததாக தெரிவித்தார்.

மேலும், கோபாலகிருஷ்ணன் அவரது தாய் கலைவாணியுடன் சேர்ந்து கொண்டு தனது ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பறித்து வைத்துக் கொண்டு மருத்துவச் செலவுக்கு கூட பணம் கொடுக்காமல் துன்புறுத்துவதாக கண்ணீர் மல்க மூதாட்டி தெரிவித்தார்.

மேலும், தற்போது மருமகளும் பேரனும் கைவிட்ட நிலையில் அக்கம்பக்கத்தினர் தனக்கு உணவளித்து உதவி வருவதாக தெரிவித்த மூதாட்டி, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு தனக்கு உதவிட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...