நடக்க முடியாமல் தவித்த நாய்க்கு சக்கர நாற்காலி செய்த கோவை பெண்ணுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

கோவை: கோவையில் கால்கள் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் சிரமப்பட்ட நாய்க்கு சக்கர நாற்காலி வடிவமைத்து உதவி செய்த கோவையைச் சேர்ந்த ஐ.டி பெண் ஊழியரை பிரதமர் மோடி 72-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் வெகுவாக பாராட்டினார்.



கோவை: கோவையில் கால்கள் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் சிரமப்பட்ட நாய்க்கு சக்கர நாற்காலி வடிவமைத்து உதவி செய்த கோவையைச் சேர்ந்த ஐ.டி பெண் ஊழியரை பிரதமர் மோடி 72-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் வெகுவாக பாராட்டினார்.

பிரதமர் மோடி பாராட்டிய காயத்ரி மற்றும் அவரது தந்தை காசிலிங்கம் கோவை, சாயிபாபாகாலனி பகுதியில் வசித்து வருகின்றனர். மெக்கானிக்கல் இன்ஜினியரான காசிலிங்கம் மற்றும் ஐ.டி., ஊழியரான மகள் காயத்ரி இணைந்து சில மாதங்களுக்கு முன், சீராபாளையம் பகுதியில் இருந்து நாய் ஒன்றை தத்தெடுத்தனர்.

'வீரா' என்ற அந்த நான்கு வயது நாய்க்கு பின்னங்கால்கள் செயல்படவில்லை. இதற்காக பி.வி.சி., பைப் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, சக்கர நாற்காலியை வடிவமைத்தனர். தற்போது அந்த நாய் மகிழ்ச்சியாக நடமாடி வருகிறது. இதற்கு தான் பிரதமர் மோடி, நெகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்தார்.

தன்னார்வலர்களுக்கு தூண்டுகோல்:

பிரதமரின் பாராட்டு குறித்து காசிலிங்கம் மற்றும் காயத்ரியிடம் கேட்டபோது, 'உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்று பாப்பா பாட்டில் பாரதியார் கூறியுள்ளார். பின்னங்கால்கள் செயல்படாத நிலையில் காப்பகத்தில் இருந்து வீராவை அழைத்து வந்தபோது, எங்கள் மனதில் பாரதியின் பாட்டு தான் தோன்றியது. வீராவை நடக்க வைக்க நாங்கள், 'வீல் சேர்' வடிவமைத்தோம். இதை பிரதமர் 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பலர் இந்த மாதிரி உயிர்களிடம் அன்பு காட்டி, ஆதரவுடன் இருக்க உந்துதலாக இருக்கும் என்று நம்புகிறோம். இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களுக்கு மிகவும் தூண்டுகோலாக இருக்கும்' என்றனர். பிரதமரின் பாராட்டை தொடர்ந்து விலங்கு பாதுகாவலர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பலரும் இவர்களின் மனிதாபிமானத்தை பாராட்டி வருகின்றனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...