கோவை: கோவை வடவள்ளி அருகே கார் மீது கல் வீசிய வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை லாலிரோட்டைச் சேர்ந்தவர் ஞானவேல் (35), பெரியார் ஆதரவாளரான இவர், தனது காரில் பெரியார் படம் மற்றும் கருத்துக்களை பொரித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை இவர் தனது காரில் கோவை வாலிரோடு அருகே வந்தபோது காரின் கண்ணாடி மீது கல் விழுந்து நொறுங்கியது. அதிர்ச்சி அடைந்த ஞானவேல் திரும்பிப் பார்த்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கல் வீசியது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை காரில் விரட்டி சென்ற ஞானவேல் வேளாண்மைப் பல்கலைக்கழகம் அருகே வாலிபர்களை மடக்கினார். அப்போது, ஞானவேல் நண்பர் வெங்கடேஷ் என்பவரும் அங்கு வந்து அந்த வாலிபர்களை பிடிக்க முயன்றனர். அப்போது, அவர்கள் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டுத் தப்பி ஓடி விட்டனர்.
பின்னர், இதுகுறித்து புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து வடவள்ளியைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் ராஜேஷ் (25), என்பவரை கைது செய்தனர். மேலும் அவரது நண்பர் சரவணனை தேடி வருகின்றனர்.