கோவை: டெங்கு காய்ச்சல் குறித்து பீதியடைய வேண்டாம் என்று டீன் காளிதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன என்பது குறித்து அரசு மருத்துவமனை டீன் காளிதாஸ் கூறியதாவது:-
கோவையில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. எனவே தண்ணீரை காய்ச்சிக் குடிக்கவேண்டும். கோவையில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பகல் இரவு நேரத்தில் கடும் வெயிலும் இரவு நேரத்தில் கடும் பனிப்பொழிவும் நிலவி வருகிறது. மழை மற்றும் வெயில் மாறி மாறி வருவதால் பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் டெங்கு கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது.
டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். டெங்கு காய்ச்சல் ஏ.டி.எஸ் கொசு மூலம் பரவுகிறது. கடந்த 2 ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு டெங்கு நோயின் தாக்கம் இல்லை. இந்த டெங்கு கொசுக்கள் மழைநீர் மற்றும் சுத்தமான நீரில் தங்கி குஞ்சு பொரித்து தங்களது இனத்தைப் பரப்புகிறது. எனவே வீடுகளில் மழைநீரைத் தேக்கும் வகையில் பழைய டயர், ஆட்டு உரல், உடைந்த பானைகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை போட்டு வைக்கக்கூடாது. மேலும் குடிநீரை மூடி வைக்க வேண்டும். தண்ணீர் தொட்டிகளை வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.
காய்ச்சல், கடுமையான தலைவலி கண் வலி, தசை மற்றும் மூட்டு வலி, நாக்குச் சுவையின்மை, பசியின்மை, குமட்டல், வாந்தி போன்றவை டெங்கு பாதிப்பின் அறிகுறிகளாகும். இத்தகைய அறிகுறிகள் உள்ளவர்கள் அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று உரிய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நிலவேம்பு கசாயம் குடிப்பது நல்லது.
இவ்வாறு டீன் காளிதாஸ் கூறினார்.