கோவையில் நூதன வழிப்பறிக் கும்பல் ஊடுருவல்: ஆயுதப்படை போலீசார் தீவிர ரோந்து!

கோவை: கோவையில் நூதன வழிப்பறி கும்பல் ஊடுருவி உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கோவை நகர் பகுதி முழுவதும் இரவுநேர ரோந்துப் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோவை: கோவையில் நூதன வழிப்பறி கும்பல் ஊடுருவி உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கோவை நகர் பகுதி முழுவதும் இரவுநேர ரோந்துப் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோவை நகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் தொடர் திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தொடர்ந்து இரவு ரோந்துப்பணிக்கு கூடுதல் போலீசாரை நியமிக்க மாநகர போலீசார் திட்டமிட்டுள்ளனர். நகரில் கடந்த நவம்பர் மாதம் முதல் அதிகரித்துவரும் திருட்டு, வழிப்பறி சம்பவங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக அவிநாசி ரோடு, ரேஸ் கோர்ஸ், செல்வபுரம், புளியகுளம், சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் சாலையில் நடந்து செல்பவர்கள் வீடுகளின் முன் தனியாக இருக்கும் பெண்களிடம் தண்ணீர் கேட்கின்றனர். அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் மர்மநபர்கள் அவர்களிமிருக்கும் நகைகளை பறித்துச் செல்வது அதிகரித்து வருகிறது.

இதேபோல் சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி ,கோவில் பாளையம் பகுதியில் கடந்த 15 நாட்களில் மூன்று வீடுகளில் 40 பவுன் நகை மற்றும் ரூபாய் 4 லட்சம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். திருட்டுகளை தடுக்க ஆளில்லாத வீடுகள் உள்ள பகுதிகள், நகரின் ஒதுக்குப்புறமாக உள்ள குடியிருப்புகளில் இரவு ரோந்துப் பணிகளை அதிகப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மாநகர போலீஸ் அதிகாரி கூறியதாவது:-

கடந்த 20 நாட்களாக நகரில் இரவு ரோந்துப் பணிக்கு கூடுதலாக 50-க்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இரவில் நடமாடும் சந்தேகப்படும்படியான நபர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது மேலும் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளியூரைச் சேர்ந்த 15 பேர் கொண்ட கும்பல் கோவையில் தங்கி வீடுகளை நோட்டமிட்டு ஆள் இல்லாத வீடுகளில் நகை பறிப்பு மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக சந்தேகிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவங்களில் ஈடுபடுவோரைக் கண்டறிய பழைய திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அவை அனைத்தும் தற்போது நடைபெற்று வரும் திருட்டுச் சம்பவங்களில் எடுக்கப்படும் கைரேகையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. இதேபோல் வழிப்பறியைத் தடுக்க நகரில் கண்காணிப்பு கேமராக்களை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...