கோவை: கோவையில் இன்று காலை முதல் மேகமூட்டமாக, வானம்காட்சி அளித்தது. அதனுடன், திடீரென சாரல் மழை பெய்ததால், வாகன ஓட்டிகள் மழையில் நினைத்தபடி வேலைக்கு சென்றனர்.

தற்போது, மார்கழி மாதம் என்பதால் கடந்த 10 நாட்களாக பனிப்பொழி வழக்கத்தை விட அதிகமாகவே உள்ளது. இன்றும் மேகமூட்டமாக காணப்பட்டதால், காலை நடைப்பயிற்சி செய்யக் கூடியவர்கள், அதிகாலை வேலைக்கு செல்லக்கூடியவர்கள் இயல்பாகவே பயணித்தனர்.
ஆனால், 10 மணிக்கு மேல் கோவை கணபதி, மணியகாரம்பாளையம், கவுண்டம்பாளையம், காந்திபுரம், ரத்தினபுரி, சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் திடீரென சாரல் மழை பொழியத் தொடங்கியது.
புயல் சின்னமும் இல்லை, பருவ மழைக்கான அறிகுறியும் கிடையாது,வ்இந்த நிலையில் திடீரென மேகமூட்டமாகவும் குளிர் காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.