கோவை: நீலம்பூர் முதல் வாளையார் வரை உள்ள சுங்க சாவடிகள் முற்றிலும் அகற்றப்பட வேண்டும், என மாவட்ட ஆட்சியரிடம் இன்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: நீலம்பூர் முதல் வாளையார் வரை உள்ள சுங்க சாவடிகள் முற்றிலும் அகற்றப்பட வேண்டும், என மாவட்ட ஆட்சியரிடம் இன்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை கனியூர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்திவிட்டு செல்லும் வாகனங்கள் அடுத்த 5 நிமிடத்தில் நீலம்பூர், சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அதேபோல், திருச்சி ரோடு அருகில் உள்ள சுங்கசாவடி, பொள்ளாச்சி ரோடு அருகில் உள்ள
சுங்கசாவடி, மதுக்கரை வரை 6 இடங்களில் சுங்கசாவடி கட்டணங்கள் செலுத்த வேண்டியுள்ளது.
சொந்த மாவட்டத்திற்குள்ளேயே பயணிக்க தினசரி அபராதமா..?
கோவை மாவட்டத்தில் உள்ள வாகனம் வைத்திருப்பவர்கள் சொந்த மாவட்டத்திற்குள்ளேயே பயணிக்க வேண்டுமென்றால் தினசரி அபராதம் கட்டி வாகனத்தில் பயனிக்க வேண்டிய சூழல் உள்ளது.
ஒப்பந்தகாலக் கெடு முடிந்தும் தனியார் நிர்வாகம் சுங்கசாவடி வசூல்..!
சாலை பராமரிப்பு மற்றும் விரிவாக்கம் இல்லாமல்லேயே, மேலும் ஒப்பந்தகாலக் கெடு முடிந்த பின்னரும் தனியார் நிர்வாகம் சுங்கசாவடி வசூல் செய்து வருகிறது. எனவே, இதைக் கணக்கில் கொண்டு உள்ளாட்சித்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகமும் இந்த முறைகேடான வசூலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கனியூர் சுங்கச்சாவடியில் புதிய கட்டணங்கள் நிர்ணயம்
அதே போல், கனியூர் சுங்கச்சாவடியில் மாதாந்திர பாஸ் வைத்திருப்போருக்கு நாள் ஒன்றுக்கு ரூ-5 என்ற அடிப்படையில் மாதம் 150 ரூபாய் கட்டணம் கட்டி, சுங்கச்சாவடியில் கடந்து செல்ல உள்ளூர் வாசிகள் அனுமதிக்கப்பட்டு பயனடைந்து வந்தனர். ஆனால், தற்சமயம் இம்முறை மாற்றப்பட்டு, நாளொன்றுக்கு வாகனங்களின் தன்மைக்கு ஏற்ப வரும் 1-ம் தேதி முதல் புதிய கட்டணங்கள் கட்ட வேண்டுமென புதிய அறிவிப்புகள் வந்துள்ள காரணத்தால் உள்ளூர் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அனைவரையும் அழைத்து பேசி, விவசாயிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.