கோவை: மேம்பாலப் பணிக்காக அந்த வழியாக சென்ற வாகனங்கள் பாதை மாறி செல்ல உதவிய வடமாநில தொழிலாளி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பரிதாபமாக இறந்தார்.
கோவை: மேம்பாலப் பணிக்காக அந்த வழியாக சென்ற வாகனங்கள் பாதை மாறி செல்ல உதவிய வடமாநில தொழிலாளி மீதுஅடையாளம் தெரியாத வாகனம் மோதி பரிதாபமாக இறந்தார்.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜோன் கோத்ரி (வயது 27). வடமாநில தொழிலாளியான இவர் கோவை - திருச்சி ரோட்டில் மேம்பால கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று மேம்பாலப் பணி நடைபெற்ற பகுதியில் வாகனங்களில் வந்தவர்களை சாலையோரம் நின்றபடி திருப்பிவிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில் பலத்த காயமடைந்த ஜோன் கோத்ரியை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்