கோவை: கோவையில் கடையின் ஷட்டரை உடைத்து பேட்டரி திருடப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கோவை சூலூர் நடு அரசூர் அண்ணமார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் நீலாம்பூர் பகுதியில் பேட்டரி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர் வழக்கம்போல வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றார். மறுநாள் காலை கடையைத் திறக்க வந்தார். அப்போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தால் கடையிலிருந்த ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான 47 பேட்டரிகள் திருட்டு போய் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தங்கராஜ் சூலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கடையின் ஷட்டரை உடைத்து பேட்டரி திருடிச் சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.