கொரோனா தடுப்பூசி: கோவை மாவட்டத்தில் 32 ஆயிரம் பேரின் விவரங்கள் ஆன்லைனில் பதிவு!

கோவை: கொரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி இங்கிலாந்து, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. விரைவில் இந்தியாவிலும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.



கோவை: கொரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி இங்கிலாந்து, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. விரைவில் இந்தியாவிலும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முதல் கட்டமாக சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி அரசு தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்கள் சுகாதாரத்துறை அலுவலர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரின் பெயர் விவரங்கள் கடந்த ஒரு மாதமாக சேகரிக்கப்பட்டு வருகிறது.

கோவையில் முதல்கட்டமாக 32 ஆயிரம் பேரின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ் குமார் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் 32 ஆயிரம் பேரின் விவரங்கள் முதல் கட்டமாக தடுப்பூசிக்கு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஜனவரி இரண்டாவது வாரத்திற்கு பின்பு தடுப்பூசி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...