பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கிராமசபை கூட்டம் நடத்த முயன்ற 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

'அ.தி.மு.க.வை நிராகரிப்போம்' என்ற பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக, கோவை தெற்கு மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள, நாயக்கன்பாளையம் கிராமத்தில் நேற்று ஆனைமலை கிழக்கு ஒன்றியம் சார்பில், கிராம சபைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர், வீடு வீடாகச் சென்று, அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.
தகவலறிந்து அங்கு வந்த வால்பாறை டி.எஸ்.பி விவேகானந்தன் தலைமையிலான போலீசார், கிராமசபைக் கூட்டம் நடத்த வந்த தி.மு.க. கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நாயக்கன்பாளையம் ஊராட்சியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்தனர். சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.