பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம் ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாலமநல்லூர் கிராமத்தில், கடந்த, 2014 ஆண்டு, ரோடு விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம் ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாலமநல்லூர் கிராமத்தில், கடந்த, 2014 ஆண்டு, ரோடு விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
புதர் சூழ்ந்த சாலை..!
இதில், நாட்டுக்கல்பாளையத்தில் இருந்து பாலமநல்லூர் வழியாக பக்கோதிப்பாளையம் செல்ல சுமார் 5 அடியில் தார் சாலையாகவும், மீதமுள்ள சாலை கான்கிரீட் சாலையாகவும் அமைக்கப்பட்டது. இதனால், இப்பகுதி பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்காக வெளியூர் செல்பவர்கள் விரைவாக வால்பாறை- பொள்ளாச்சி நெடுஞ்சாலையை சென்றடைய முடிந்தது. நாளடைவில் அந்த ரோடு பராமரிப்பின்றி போனதால், இருபுறங்களிலும், புதர் சூழ்ந்து கிடப்பதால், தற்போது மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
பொதுமக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் இந்த ரோட்டை சீரமைக்காதால், தற்பொழுது அந்த இடத்தில் ரோடு உள்ளதே தெரியாத அளவுக்கு புதர் சூழ்ந்துள்ளது. இதனால், அங்கு விஷ ஜந்துகள் குடியேறி உள்ளதால் மக்கள் அச்சப்பட்டு வருகின்றனர்.
எனவே, இந்த ரோட்டை முழுமையாக சீரமைத்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
source: SimpliCity News Team