செளரிபாளையம் பகுதியில் கிராமசபைக் கூட்டம்: நா.கார்த்திக் எம்.எல்.ஏ - தி.மு.க.வினர் கைது!

கோவை: சௌரிபாளையம் பகுதியில் தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்திய தி.மு.க. எம்.எல்.ஏ உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: சௌரிபாளையம் பகுதியில் தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்திய தி.மு.க. எம்.எல்.ஏ உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு காரணங்களால் கிராமசபைக் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில், கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட செளரிபாளையம் அருகே இந்திரா நகரில் கிராமசபைக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.

அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும் என தி.மு.க தரப்பில் கூறப்பட்டதால் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். காவல்துறையின் தடையை மீறி மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ தலைமையில் கிராமசபைக் கூட்டம் துவங்கப்பட்டது.



இதை காவல்துறையினர் தடுத்ததால் அ.தி.மு.க அரசுக்கு எதிராகவும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைக் கண்டித்து தி.மு.க.வினர் கோஷங்களை எழுப்பினர்.



இதையடுத்து, காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட நா.கார்த்திக் எம்.எல்.ஏ, பகுதி பொறுப்பாளர் சேரலாதன், வார்டு செயலாளர் சுரேஷ், மணிகண்டன் மற்றும் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...