கோவை: தொடர் விடுமுறையால் சுற்றுலாத்தலமான வால்பாறை களை கட்டியது.

கோவை மாவட்டம் வால்பாறை ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்தில் உள்ளதால் எந்த காலத்திலும் சீதோஷ்ண நிலை ஒரே சீராக உள்ளது. இதன் காரணமாக தமிழகம் மட்டுமன்றி கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரியில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வால்பாறைக்கு வந்து செல்கின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்துள்ளனர்.

சுற்றுலாத்தலமான கூழாங்கல் ஆறு, சோலையாறு அணை ஆகிய பகுதிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். ஆற்றில் குளித்தும் தேயிலைத் தோட்டங்களில் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். இதன்காரணமாக வால்பாறையில் ஹோட்டல்கள் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. வால்பாறை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொரானா தொற்று காரணமாக கடந்த ஆறு மாத காலமாக வியாபாரத்தை இழந்திருந்த வியாபாரிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.