திமுகவினர் மீது தொடர்ந்து பொய் வழக்கு: காவல்துறையை கண்டித்து காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் - நா.கார்த்திக் எம்எல்ஏ

கோவை: திமுகவினர் மீது தொடர்ந்து பொய் வழக்கு போட்டு வரும் காவல்துறையை கண்டித்து மக்கள் மற்றும் திமுக கட்சியினரை திரட்டி காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று சிங்காநல்லூர் தொகுதி கார்த்திக் எம்.எல்.ஏ எச்சரித்துள்ளார்.


கோவை: திமுகவினர் மீது தொடர்ந்து பொய் வழக்கு போட்டு வரும் காவல்துறையை கண்டித்து மக்கள் மற்றும் திமுக கட்சியினரை திரட்டி காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று சிங்காநல்லூர் தொகுதி கார்த்திக் எம்.எல்.ஏ எச்சரித்துள்ளார்.

திமுக சார்பாக தேர்தல் நெருங்குவதை ஒட்டி கிராமசபைக் கூட்டம் நடத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நேற்று முன்தினம் சிவானந்தா காலனி அண்ணாநகரில் திமுக காந்திபுரம் பகுதி பொறுப்பாளர் சேதுராமன் தலைமையில் திமுகவினர் தெருமுனைக்கூட்டம் நடைபெறுவதற்கான அறிவிப்பு குறித்த வால் போஸ்டர் ஒட்டினர்.

கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் விதியை மீறியதாக திமுகவினர் 30 பேர் மீது ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை வன்மையாக திமுக கழகம் கண்டிக்கிறது. இவை அனைத்தும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி வேலுமணி அவர்களின் தூண்டுதலின் பேரிலேயே நடைபெறுகிறது.

உதாரணமாக, கடந்த மாதம் தளபதி ஸ்டாலின் பற்றி அநாகரிகமான முறையில் அதிமுகவினர் சார்பில் வால்போஸ்ட்டர் ஒட்டப்பட்டிருந்தது. திமுகவினர் அதை கிழித்தனர். காவல்துறையிடம் புகார் அளித்தும் அதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை.

கடந்த 2017ம் ஆண்டு ஹோப் காலேஜ் பகுதியில் பிரம்மாண்டமான ஆர்ச் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்தது. அது சரிந்து விழுந்து ஒரு வாலிபர் மரணம் அடைந்தார். சிங்காநல்லூர் பகுதியில் அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து மொபட்டில் சென்ற பெண் மீது விழுந்து இரண்டு கால்களும் அந்த பெண்ணுக்கு அகற்றப்பட்டது. தி.மு.க சார்பில் ஆறுதல் கூறி நிவாரணம் திமுக சார்பாக வழங்கப்பட்டது.

இதேபோல, உள்ளாட்சி அமைச்சரின் தொண்டாமுத்தூர் தொகுதியில் நிவாரணம் வழங்கச் சென்ற வாகனம் மோதி கரடிமடையைச் சேர்ந்த ஒரு பெண் இறந்து போனார். வழக்கு ஏதும் பதியாமல் அவசர அவசரமாக அரசு மருத்துவமனையில் 7:30 மணிக்குள் போஸ்ட்மார்டம் செய்து கொடுக்கப்பட்டது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு அதிமுக கொடிக்கம்பம் கட்டிய பூவரசன் என்ற வாலிபர் மின்சாரம் தாக்கி இறந்து போனார். இதேபோல, மசக்காளிபாளையம் லட்சுமி நகர் பகுதியில் அமைச்சர் அம்மா மினி கிளினிக் தொடங்குவதற்காக பயணம் செல்கிறார். அங்கு முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறாக கட்அவுட்டுகள், பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து நான் காவல்துறை ஆய்வாளரிடம் கேட்டபொழுது ஆய்வாளர் மழுப்பலான பதிலே கொடுக்கிறார். எந்த பிரிவின்கீழ் இதற்கு நீங்கள் அனுமதி வழங்கினார்கள் என்று கேட்டபோது அவரிடம் இருந்து சரியான பதில் வர மறுக்கிறது.

அதேபோல, தேர்தல் நெருங்குவதால் அதிமுகவை மக்கள் புறக்கணிக்க தொடங்கி உள்ள நிலையில் அடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் என்று மக்கள் உறுதியாக நம்புகின்ற நிலையில், காவல்துறையை வைத்து தன்னுடைய ஆளுங்கட்சியின் உடைய அதிகாரிகளை வைத்து தொடர்ந்து பொய் வழக்குகள் போடுவது போன்ற செயல் நடைபெற்று வருகிறது.

மேலும், காவல்துறை வழக்குப் போடுவதை நிறுத்திக் கொள்ளாவிட்டால். திமுகவினர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் மக்கள் சக்தியையும் திமுக கட்சியினரையும் ஒன்று திரட்டி கோவை மாநகர ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக கழகம் சார்பாக என்னுடைய தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக் கூறினார்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...