கோவை: கோவை போத்தனூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை போத்தனூர் காவல் நிலையம் அருகே உள்ள சாய் நகர், சத்ய நாராயண நகர், பாத்திமா நகர் உள்ளிட்ட மூன்று நகரின் மையப் பகுதியில் 65 சென்ட் Reserved site இடம் உள்ளது. இந்த இடம் குழந்தைகள் விளையாடுவதற்கும் பூங்கா அமைப்பதற்கும் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், திடீரென்று கோவை மாநகராட்சி இந்த இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இரண்டு முறை பணிகளை மேற்கொள்ள விடாமல் தடுத்தனர்.
இந்த நிலையில், இன்று கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளை பார்வையிட மாநகராட்சி அதிகாரிகள் வருவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஈடுபட உள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் போத்தனூர் காவல் துறையினர் காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அங்கு திரண்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதைக் கைவிட வேண்டும் என்றவர்கள், மாநகராட்சி ஆணையர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி உறுதி அளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் கூறி தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.